ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகம் THE LAMBS BOOK OF LIFE பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா அமெரிக்கா 56-06-03 காலை வணக்கம், நண்பர்களே. இன்றைக்கு இங்கு இருப்பது எனக்கு ஒருவிதமாக ஆச்சரியமாயிருந்தது. நான் இங்கே இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் கென்டக்கியில் இருக்கப் போவதா யிருந்தேன். என்னுடைய மிக அருமையான நண்பர் எங்களுடைய சகோதரர் லைல் மக்ஸ்பேடின் மிகவும் சுகவீனமானார். [ஒலிநாடாவில் காலியிடம்) மருத்துவமனையில் மரிக்கும் நிலையில். வழக்கமாக இங்கு வந்து கொண்டிருந்த திருமதி பெர்கர்ஸன் அவருடைய மகனும் கூட, மருத்துவமனையில் மரித்துக்கொண்டிருந்தார். எனவே நான் போகவில்லை, அவர்களுக்காகவே தங்கியிருந்தேன். 2 அதன்பின்னர் நியூ ஆல்பனியில் உள்ள பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்த திரு. மாத்தேனி, சில்வர் தெருவில், ஒரு கடந்த... இது இடையில் உள்ளது...அது ஓக் மற்றும் சில்வர் என்ற இடத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். அவர்...நான் அவருக்காக இன்றிரவு பேச வேண்டியதாயிருந்தது, நான் அவரிடம் கூறினேன்... கடந்த புதன் கிழமையன்று அதை ரத்து செய்துவிட்டேன், நான் இந்தியானாபோலிஸிலிருந்து திரும்பி வரும் வரையில் நான் காத்திருப்பேன் என்று அவரிடம் சொன்னேன். அதன்பின்னர் நான் நேற்று சகோதரன் லைலைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தபோது, ஏன், நான் அவரைச் சந்தித்தேன். அதற்கு அவர், "சரி, நீங்கள் போகவில்லை என்பதை நான் காண்கிறேன்" என்றார். 3 அதற்கு நான், "இல்லை" என்றேன். அவர், "சரி, எப்படியாயினும், வந்து பேசுங்கள்" என்றார். எனவே, கர்த்தருக்கு சித்தமானால், சகோதரன் மேத்னிக்காகப் பேச, இன்றிரவு நான் அங்கே இருப்பேன் என்று நான் யூகிக்கிறேன். மேலும், ஆம், நாங்கள் அங்குச் சென்றபோது, நான் அவருக்காக ஒரு சுகமளிக்கும் ஆராதனை நடத்தப்போவதாக இருந்தேன் என்று நான் அவரிடம் கூறினேன். நான் வழக்கமாகச் சுகமளிக்கும் ஆராதனைக்கு சுமார் மூன்று நாட்கள் உபவாசிக்க விரும்புகிறேன். எனவே நான் அவரிடம் பேசலாம் என்றும், யாராவது அங்கே இருப்பார்களானால், எப்படியிருந்தாலும், வழக்கமான ஜெப வரிசையில், நாங்கள் அவர்களுக்காக ஜெபிப்போம் என்றும் கூறினேன். 4 இப்பொழுது, நமக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது, அடுத்த திங்கட்கிழமையிலிருந்து ஒரு வாரம், இப்பொழுது இண்டியானாபோலிஸில் உள்ள காடில் கூடாரத்தில் ஆராதனைகள் துவங்குகிறது. அங்கே மேலே ஒரு மகத்தான கூட்டத்தில் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு குழந்தையாக, கிறிஸ்துமஸ் எதிர்பார்ப்புகளோடு, நான் அந்த ஆராதனைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான்... 5 நீங்கள், கர்த்தருக்கு ஊழியம் செய்வதைக் குறித்த ஏதோ ஒரு காரியம், எங்களால் அதிக தூரம் செல்ல முடியாது என்று தோன்றுமளவிற்கு, சில சமயங்களில் நாம் மிகவும் களைப்படைந்து விடுகிறோம். அதன்பின்னர் நீங்கள் ஓரிரு நாட்கள் இளைப்பாறும் போது, ஏதோ ஒன்று உங்களைத் தூண்டுகிறது, நீங்கள் மறுபடியும் செல்ல வேண்டும். ஆகையால், இன்றைக்கு, நாம் ஒரு நோக்கத்திற்காகவே இங்கு இருக்கிறோம், அது, கர்த்தரை சேவிக்க வேண்டும் என்பதாகும். 6 நாம் ஜெபம் செய்து வார்த்தையை வாசிப்பதற்கு சற்று முன்பு, நான் சகோதரன் நெவில் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான்...நேற்று, கென்டக்கியில் உள்ள அவருக்காக ஒலிபரப்பில் பிரசங்கிப்பதற்காக, ஒரு நோக்கத்தோடு, நேற்று நான் வீட்டிலேயே தங்கியிருந்தேன். அடுத்த சனிக்கிழமை, தேவனுக்கு சித்தமானால், சகோதரன் நெவில் விரும்பினால், அடுத்த சனிக்கிழமை காலை ஒலிபரப்பில், சகோதரன் நெவில் அவர்களுக்காக நான் பேச விரும்புகிறேன். 7 எனவே, அவர் என்னை எளிதாக மன்னிப்பதற்கு, மிகவும் கருணையுள்ளவராயிருந்தார். அவர் கூறினார்...நான் அவரைச் சாதகமாக உபயோகித்துக் கொண்டேன் என்று நான் யூகிக்கிறேன், அவரும் அந்த நபர்களில் ஒருவர்...மேலும், "யாரோ ஒருவரை எதிர்பார்க்கிறேன்" என்ற அந்தப் பாராட்டை என்னால் திரும்ப அளிக்க முடியும். நியூ ஆல்பனியில் உள்ள சகோதரன் லைல் மற்றும் மற்றவர்களிடம் அவர்கள் என்னை அழைத்தபோது, அது என்னை நிலைகுலையச் செய்தது. நான்...ஒன்பது மணிக்குப் பத்து நிமிடங்கள் இருந்தன. மேலும் நான், "ஓ, இன்னும் பத்து நிமிடங்களில் நான் அந்த ஒலிபரப்பில் இருக்க வேண்டியதாயிருந்தது" என்றேன். இங்கே, நான் ஜெபர்ஸன்வில்லில், அவர் அங்கே எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். எனவே நான்... 8 சகோதரன் உட் நேற்று அவரை அழைத்து, முதலில் எனக்காகச் சகோதரன் உட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் எண்ணினேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அவர் இந்தக் காலையில் என்னைப் பேச வைக்கும்படியாக அதைத் தண்டித்தார். எனவே நாம் இங்கே இருந்தோம். எனவே அவர்...நாங்கள்... 9 நம்முடைய ஆராதனைகளில் தேவன் இருப்பார் என்று - என்று நாங்கள் நம்புகிறோம். நான் எதையும் முன்கூட்டியே திட்டமிடவில்லை; வேதாகமத்தில் எங்கிருந்து தொடங்குவது என்று கூட எனக்குத் தெரியவில்லை; ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு என்னுடைய வேதாகமத்தை எடுத்து, கீழே பார்த்தேன். நான் என்னுடைய காலின்ஸ் வேதாகமத்தை எடுக்க வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அது சற்று பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. 10 என்னே! நான் நாற்பதைக் கடந்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் நாற்பது வயதை அடையும்போது, உங்களுக்கு நெருக்கமான எதையும், நீங்கள் முன்பு போல் பார்க்கமாட்டீர்கள், உங்களுக்குத் தெரியும். அது உண்மையென்று எத்தனை பேர் அறிவீர்கள்? ஆம். ஆம், ஐயா. 11 இங்கே அண்மையில், நான், "என்னிடத்தில் ஏதோ கோளாறு உள்ளது என்று கூறலாம் என்றும், நான் ஒரு பச்சைக் கண்ணாடியையோ அல்லது ஒரு பழுப்பு நிற கண்ணாடியையோ அணிய முடியாது" என்று எண்ணினேன். என்னால் ஒருபோதும் முடியவில்லை; அது என் வயிற்றில் எனக்குச் சுகவீனமுண்டாக்குகிறது. எனவே நான், "ஏதோ கோளாறு உள்ளது" என்றேன். நான் மருத்துவர் அடேயரை அழைத்தேன், அப்பொழுது நான், "டாக், என்ன நிறம்...உங்களால் என்னுடைய கண்களைப் பரிசோதித்துப் பார்க்க முடியுமா, நான் எந்த நிற கண்ணாடி அணிய வேண்டும் என்று என்னிடம் கூறுங்கள்?" என்று கேட்டேன். 12 அவர், "என்னே, நான் என்னவென்று உங்களுக்குக் கூறலாம்" என்றார். மேலும், "நான் உங்களுக்குச் சொல்லுவேன். நான் உன்னை லூயிவில்லில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவரிடம் அதன் பேரில் அனுப்புவேன்" என்றார். "பாருங்கள்," நான், "எனக்குக் கண் பரிசோதனை வேண்டாம்" என்றேன். நான், "எனக்குக் நல்ல கண்கள் உள்ளன. ஒரு முடி தரையில் கிடப்பதை என்னால் நின்று பார்க்க முடிகிறது" என்றேன். 14 அவர், 'ஆனால், எப்படியாயினும், நீங்கள் ஒரு பரிசோதனைக்குட்படுத்துவது நல்லது, அப்பொழுது நீங்கள் எந்த நிறத்தில் கண்ணாடி அணிய வேண்டும் என்பதை அவர் உங்களுக்குச் சொல்லுவார்" என்றார். 15 எனவே, நான் அங்குச் சென்றேன். மேலும், அவர் ஒரு கிறிஸ்தவ சகோதரன் என்பது கண்டறியப்பட்டது, அவர் என்னுடன் ஆப்பிரிக்காவிற்கு திரும்பிச் சென்று சில அறுவை சிகிச்சைகளைச் செய்ய விரும்பினார். மேலும், "இப்பொழுது, அந்தப் பூர்வகுடிகள் மிகவும் வினோதமானவர்கள், பாருங்கள்" என்றார். மேலும், "அவர்கள் எந்தக் கத்தியினாலும் அவர்களை வெட்ட அனுமதிக்கமாட்டார்கள்" என்றார். ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள். "நான் ஆறு மாதங்கள் இலவச சேவை அளிக்க விரும்புகிறேன், கண்புரை சிகிச்சை மற்றும் அது போன்ற காரியங்கள், பூர்வகுடியினருக்காக" என்றார். அவர், "நீங்கள் அங்குச் செல்லும்போது," "கர்த்தருடைய சேவைக்காக என்னுடைய வாழ்நாளில் ஆறு மாதத்தை அளிக்க விரும்புகிறேன்" என்றார். நான், "டாக், நீர் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங் கொண்டிருக்கிறீரா?" என்று கேட்டேன். அவர், "அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும்" என்றார். 16 அவர் எனக்கு ஒரு சாட்சியைக் கூறினார், ஏறக்குறைய ஒரு சமயம்...அவர் ஒரு தொண்டை மற்றும் கண் சிறப்பு மருத்துவராக இருந்தார். அவர்கள் அவரை அழைத்ததாக அவர் கூறினார். ஒரு சிறு குழந்தை அந்த ஊதல்களில் ஒன்றை விழுங்கினபோது, அது அதனுடைய தொண்டையில் சிக்கிக் கொண்டது. மேலும், "நான் அங்குச் சென்றிருந்தேன், அப்பொழுது குழந்தை மரித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அதை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது" என்றார். மேலும், "எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனவே," என்று கூறி, "நான், அறையை விட்டு வெளியே வந்தேன், நான், 'அன்புள்ள பரலோகப் பிதாவே, அந்த ஏழைக் குழந்தைக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை எப்படியாவது அறிந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். அது மரித்துக் கொண்டிருக்கிறது. நான் அதை இழுக்க, அதைத் தப்புவிக்க வேறெந்த வழியும் இல்லை, மேலும் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை." என்றேன். மேலும், "குழந்தை, 'ஊ!' என்றது. அப்பொழுது ஊதல் தரையில் பறந்தது. எனவே அவர், "நான் எப்படி விசுவாசிக்காமல் இருக்க முடியும்?" என்றார். ஜெபம் காரியங்களை மாற்றுகிறது. அது உண்மை. எனவே, அவர் என்னிடம் கூறினார். நாங்கள் அங்கே அமர்ந்து சிறிது நேரம் பேசினோம். 17 அவருக்கு அந்தச் சிறிய, இருண்ட அறை இருந்தது, அந்தச் சிறிய விஷயம் அங்கே நடக்க வேண்டும் என்று அவர் விரும்பினார், அப்பொழுது நான் அந்தச் சிறிய சிவப்பு விளக்கைக் கண்டேன். அவர், "உங்களால் அதைப் படிக்க முடிகிறதா?" என்றார். 18 அதில் 20/20 என்று கூறப்பட்டுள்ளதை நான் காண்கிறேன். அதற்கு நான், "ஆம், ஐயா" என்றேன். என்னால் அதைப் எப்படியிருந்தாலும் படிக்க முடிந்தது 20/20. பிறகு அவர் 15/15 என்று போட்டார், என்னால் அதைப் படிக்க முடிந்தது. மேலும் 10/10, என்னால் அதைப் படிக்க முடிந்தது. 19 அதற்கு அவர், "சரி, உங்க கண்களில் பெரிய குறை எதுவும் இல்லை." என்றார். அதன்பின்னர் அவர் இங்கே ஒரு சிறிய தொலைநோக்கியை வைத்து, ஒரு..."அதை எனக்காக வாசித்துப் பாருங்கள்" என்றார். நான் அதைக் கவனித்தேன், என்னால் அதை நன்றாக வாசிக்க முடிந்தது. அவர் தொடர்ந்து நெருங்கிக்கொண்டே வந்தார். நான் என்னுடைய வாசிப்பை மெதுவாக்கத் துவங்குகிறேன். அவர் ஏறக்குறைய இந்த விதமாக இருந்தபோது, நான் வாசிப்பதை விட்டுவிட்டேன். அவர், "நான் உங்களைக் கேட்பதற்கு முன்பே, நான் உங்களுக்குச் சொல்லுவேன். நீங்கள் நாற்பது வயதைக் கடந்து விட்டீர்கள்" என்றார். நான், "ஆம். அது உண்மை" என்றேன். அதற்கு நான், "எனக்கு நாற்பத்தைந்து வயது" என்றேன். 20 மேலும் அவர் கூறினார்-அவர், "சரி, ஒரு மனிதன் நாற்பது வயதைக் கடக்கும்போது..." என்றார். மேலும், "நீங்கள் எப்படி இதை இவ்வளவு காலம் கடந்து வந்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்றார். மேலும், "உங்களுடைய தலைமுடி நரைத்து, உங்களுடைய தோல் சுருக்கமடைந்து, உங்களுடைய காதுகளில் முடிகள் போன்றவை வருவதைப் போல" என்றார். திரு. ஏகன் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி என்ற முறையில் உங்களுக்கு அதைக் கூற முடியும். "உங்களுக்கு நாற்பது வயதாகும்போது," "உங்களுடைய கண் இமைகள் தட்டையாகிவிடுகின்றன, அவைகள் விரிவடையாது" என்றார். மேலும், "இப்பொழுது அதை எப்படி செய்ய வேண்டும் என்று நான் உனக்குக் கூறுவேன். பாருங்கள், இப்பொழுது, நீங்கள் உங்களுடைய கண்களை உண்மையாகவே நெருக்கமாகச் சுருக்கி, அதைப் படியுங்கள்." 21 சரி, சகோதரனே, அது எனக்கு அவ்வளவு அருகில் இருந்தால், என் கண்களைச் சிமிட்டி என்னால் அதை வாசிக்க முடியும். என்னுடைய கரங்களை இந்த விதமாக வைத்து, ஒரு சிறு தொலைநோக்கியை உருவாக்கி, நீங்கள் அதைப் படிக்கலாம். அது உங்களுடைய கண்களில் எந்தக் கோளாறும் இல்லை. நாற்பது வயதுடைய ஜனங்கள் வாசிக்கும் கண்ணாடியை அணிய வேண்டும் என்பது இயல்புதான். 22 எனவே அவர் எனக்குச் சிலவற்றை செய்ய விரும்பினார். மேலும், சரி, அவர் அதைச் செய்தார். ஆனால் நான்-நான் அந்தக் காரியங்களை ஒருபோதும் விரும்பினதில்லை, நீங்கள் பாருங்கள். நான்-நான் எப்பொழுதும் அவைகளைக் குறித்து ஒருபோதும் சிந்திப்பதில்லை, எப்போதாவது படிப்பேன், ஆனால் நான் எனக்குக் காலின்ஸ் வேதாகமத்தை வாங்கியுள்ளேன், அது சற்று பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டதாய் உள்ளது. மேலும் நான், "சரி, நீங்கள் பாருங்கள், என்னால் அவைகளை அணிந்து பழக்கப்படுத்த முடியாது" என்று எண்ணினேன். நீங்கள் இல்லை - நீங்கள் காண்பதில்லை...நான் இந்த விதமாகச் சற்று தள்ளிப் பார்த்தால், உங்களால் எதையும் காண முடியாது. ஆனால் நீங்கள் கூர்ந்து நோக்கிப் பார்த்தால், அப்பொழுது அது உங்களுக்கு அருகே கொண்டு வருகிறது. 23 மேலும், "இப்பொழுது, நீங்கள் இந்த விதமாக வாசிக்கத் துவங்குங்கள்," என்று கூறி, "முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் உங்களுடைய கரத்தைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே இருக்கிறீர்கள். அந்த அளவுக்கு உன்னுடைய கரம் போதுமான நீளமில்லாததால், நீங்கள் அதை நோக்கி நீட்டலாம்" என்றேன். எனவே, அது-அந்த விதமாகத்தான் அது உள்ளது. எனவே, இப்பொழுது, கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. 24 இப்பொழுது இந்தக் காலையில், நாம் ஞாயிறு பள்ளி பாடத்தைத் துவங்குவதற்கு முன்பு, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். மதிப்பு என்பது என்ன- என்ன? நான் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இன்று காலை எனக்குப் போதுமான குரல் இருந்தால், நான் அந்தப் பொருளின் பேரில் பிரசங்கித்திருப்பேன். ஆனால், என், தொண்டை மோசமாக உள்ளது, இன்றிரவு நியூ ஆல்பனியில் இந்தக் கூட்டம் வரப்போகிறது. பின்னர், எனக்குக் கிடைத்தது...பிரச்சாரங்கள் தொடங்குகின்றன. நான் இக்காலையில் சில வேதவாக்கியங்களிலிருந்து சற்று நேரம் போதிக்க விரும்புகிறேன். ஆனால் மதிப்பு என்றால் என்ன? 25 என்னுடைய தாயார், அவள் இங்கே இல்லை என்று நான் யூகிக்கவில்லை. நான் அவளை எங்கும் காணவில்லை. அவள் தானே? ஆம், அம்மா, நீ சிறு உருவங்கொண்டவர்களாகிவிட்டாய். எனவே, நான் நேற்று அவளிடம் கேட்டேன். நான் அவளிடம் அந்தப் பொருளைக் கேட்டேன், ஏனென்றால் நான் அதன் பேரில் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போதாவது உங்களுடைய சிந்தையில் ஒரு காரியத்தைப் பெற்று, அப்படியே படிக்கத் துவங்கினீர்களா? சகோதரன் வெப்பர் அவர்களே, நீங்கள் அதை அநேக முறை செய்திருக்கிறீர்கள், நீங்கள் படிக்கத் துவங்கினீர்கள். 26 மதிப்பு என்றால் என்ன? நான் சிந்திக்கத் துவங்கினேன். நான், "உங்களுக்குத் தெரியுமா, இங்கே ஒரு குவியலில் பத்து கோடி டாலர்கள் என்னிடம் இருந்தால், நான் இங்கே ஒரு சிறிய பொத்தானை வைத்திருந்தால். நான் இந்தப் பொத்தானை அழுத்தினால், நான் என்னுடைய கோடிக்கணக்கான டாலர்களை இழந்துவிடுவேன், ஆனால் நான் இறந்துபோன என்னுடைய வயோதிகத் தகப்பனிடத்தில் பேச முடிந்தால், ஒரு மணி நேரமாக, மீண்டும் ஒரு அழிவுள்ள ஜீவியமாக. நான் என்ன செய்வேன்?" தயக்கம் இல்லாமல், நான் பொத்தானை அழுத்துவேன். இந்தப் பாடத்தை நான் கற்பிக்கையில், இந்தக் காலையில் என்னுடைய தந்தையை இந்த நாற்காலியில் அமரச் செய்ய, நான் கோடிக்கணக்கான டாலர்களை கொடுக்க விரும்புகிறேன். எனவே பணத்தின் மதிப்பு என்ன? பணத்தைக் காட்டிலும் ஆத்துமா எவ்வளவு மேலானது? புரிகிறதா? 27 இப்பொழுது, அம்மா, நான் அந்தச் சிறிய பழைய டி-மாதிரி ஃபோர்ட், சிறிய பழைய 26 மாதிரியை வைத்திருந்தபோது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் அந்தக் காரியத்தை எப்படி மெருகேற்றுவேன்! நான் ஏறக்குறைய பதினாறு அல்லது பதினேழு வயதுடைய ஒரு சிறுவன். அப்பொழுது நான் ஒரு பாவியாயிருந்தேன். சில சமயங்களில்...நான் அங்கே பின்னால் உள்ள திரு. ஜெந்தருடன் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நான்...ஞாயிறு பிற்பகலுக்குப் பிறகு.. ஞாயிறு காலை, நான் அங்குச் சென்று, எல்லா பாகங்களையும் மற்ற காரியங்களையும் கூர்மைப்படுத்துவேன், காற்று அமுக்கி, அதைச் சுத்தம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், நான் அந்தச் சிறிய பழைய ஃபோர்ட் காரை மெருகேற்றுவேன், அது கிட்டத்தட்ட அதிலிருந்து வர்ணம் உதிர்ந்து விடும் என்பது போன்று காணப்பட்டது. இன்று காலை நான் அந்த ஃபோர்டின் ஒரு துண்டைக் கண்டுபிடிக்க முயற்சித்தால் என்னவாகும்? அந்தக் காற்று அமுக்கியில் உள்ள அந்தத் துணுக்குகளில் ஒன்றை நான் கண்டுபிடிக்க முயற்சித்தால் என்னவாகும்? நான் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய அதே நேரத்தில், நான் என்னுடைய ஃபோர்ட் காரை மெருகேற்றிக் கொண்டிருந்தேன். மதிப்பு எங்கே உள்ளது என்று நான் யோசிக்கிறேன். 28 ஞாயிறு காலை வேளைகளில் அவர்கள் என்னை அனுமதித்த வரையில் நான் அங்கு வேலை செய்தேன். நான் கடனாளியாயிருந்த படியால், நான் அதைப் பாராட்டினேன். நான்... ஆனால் அது என்னை எங்கே-எங்கே கொண்டு வந்தது? அது எதை ஆதாயம் பண்ணினது? 29 சகோதரன் லெட்ஃபோர்ட், இந்தக் காலையில் உங்களிடமும், நானும், சகோதரன் நெவிலிடமும் யாராவது வந்தால், இங்குள்ள நாங்கள் எல்லோரும், எங்கள் மூவரும், சரியாகக் கூறினால், "ஊழியர்களே, நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் பத்து இலட்சம் டாலர்கள் கொடுக்கப் போகிறேன்" என்று கூறுகிறோம். யாரோ ஒருவர் அதைச் செய்ய...தகுதியுள்ளவராயிருந்தார். 30 மேலும் நான், "இப்பொழுது, சகோதரன் லெட்போர்ட், சகோதரன் நெவில், நாம் என்ன செய்யட்டும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நாம் வெளியே சென்று, நம்மால் முடிந்த எல்லா ஏழைகளையும் கண்டறிவோமாக. பிள்ளைகளுக்குச் சில ஆடைகளை வாங்கிக் கொடுப்பதன் மூலமும், அடமானத்தை செலுத்தி, நாம் ஒவ்வொரு சிறு வீட்டையும் மகிழ்ச்சியுள்ளதாக்குவோமாக, அல்லது இந்தச் சிறிய இடத்தை வாங்கலாம். நாம் அதை ஒருபோதும் தவறவிடமாட்டோம். ஒரு துண்டுக்குப் பத்து இலட்சம் டாலர்கள், ஏன், அதன் வட்டியிலிருந்து, அதைக் குறித்து நம்மால் முடிந்தளவு அக்கறை எடுத்துக்கொள்வோம்; அதை ஏதோ ஒரு நல்ல முதலீட்டில் அல்லது ஏதோ ஒரு காரியத்தில் போட வேண்டும். அப்பொழுது நாம் என்ன செய்வோம்? அது அருமையாயிருக்கும், அதாவது, அதைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கட்டும். எங்களுடைய இருதயங்கள் திருப்தியடைந்ததை உணரும். 31 ஆனால், இப்பொழுது, இன்றிலிருந்து நூறு ஆண்டுகளில், சகோதரர்களே, நாம் இன்றிலிருந்து நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும், அது தேவனுடைய அற்புதம் தேவைப்படும், அது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, நாம் நித்தியத்தில் இருப்போம். நாம் செய்திருந்த கோடிக்கணக்கான டாலர்கள் அல்லது ஏழைகளுக்கு உணவளிப்பது, என்ன நன்மையைச் செய்யும்? பார்த்தீர்களா? அது அவ்வளவு பெரியதாக இருக்காது. இந்தக் காலையில் நான் கோடிக்கணக்கான பணத்தை வைத்திருந்தால், நாம் போய்விட்ட பிறகு அது நமக்கு என்ன நன்மையைச் செய்யும்? 32 ஆனால் நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும். எங்களிடம் அந்தப் பணம் இல்லை. நீ ஒரு ஏழை மனிதன்; நாம் யாவரும் ஏழை. அது உண்மை. நாம் ஜனங்களின் பிச்சையினால் ஜீவிக்கிற ஊழியக்காரர்களாய் இருக்கிறோம். ஆனால் சகோதரனே, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு கறுப்பின சிறு பையன் இந்த அளவு உயரத்தில், அல்லது லூயிவில்லில் தெருவில் ஒரு விபச்சாரி, ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட்டால்; நித்தியத்தில் அந்த நட்சத்திரம் அப்பால் பிரகாசித்துக் கொண்டிருக்கையில், நம்முடைய நாமம் அதில் சுற்றப்படும். அதுதான் உங்களுடைய மதிப்பு. நீங்கள் எவ்வளவு பெற்றிருக்கிறீர்கள் என்பதல்ல, நீங்கள் எவ்வளவு வாஞ்சிக்கிறீர்கள் என்பதல்ல. கிறிஸ்து இயேசுவுக்காக ஆத்துமாக்களை இரட்சிக்க நீங்கள் எவ்வளவாகச் செய்ய முடியும் என்பதே அது. நம்முடைய பணம் மங்கிப்போகும். 33 நான் அந்தச் சிறிய பழைய ஃபோர்ட் காரை மெருகேற்றினேன். இந்தக் காலையில், அவர்கள் எனக்குக் கொடுத்த காடிலாக் கார் அங்கே மோட்டார் வண்டி நிறுத்தும் இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்நாட்களில் ஒன்றில், காடிலாக் காரும் ஃபோர்ட் கார் உள்ளது போன்று இருக்கும், அது இனிமேல் இருக்காது. ஆனால் தேவன் இன்னமும் மாறாதவராகவே இருப்பார். ஆனால், சகோதரனே, கிறிஸ்துவுக்காக நான் ஒரு ஆத்துமாவை இரட்சிக்கப் பெற்றுக் கொள்வேனேயானால், நித்தியம் என்ற ஒன்று இருக்கும் வரை, தேவனுடைய மகிமை அந்த ஆத்துமாவின் மேல் தங்கியிருக்கும். 34 ஆகையால், எப்படியாயினும், மதிப்பு என்றால் என்ன? உங்களுடைய தொண்டையில் போராட்டங்கள் இருக்கும்போது, மருத்துவர் உங்களுடைய கால் சட்டையின் நாடித் துடிப்பைக் காணும்போது, அது என்ன நன்மையைச் செய்கிறது? எல்லா பணமும், எல்லா புகழும் என்ன பயன்? ஜனங்கள் உங்களை முதுகில் தட்டிக் கொடுக்க அல்லது நீங்கள் ஒரு பெரிய நபராக ஆகிவிட்டால், அது உங்களுக்கு என்ன நன்மையைச் செய்கிறது? கொஞ்சம் கூட இல்லை. அது மறைந்து, பூமியின் மேல் இங்கே தங்கிவிடுகிறது. 35 ஆனால் ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட்டால், விடிவெள்ளி நட்சத்திரம் ஆகாயத்தில் பிரகாசிக்கும் வரை, அதில் உங்களுடைய பெயர் சுற்றப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே, சகோதரர்களே, நாம் ஆத்துமாக்களை இரட்சிப்போமாக. இல்லத்தரசிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும், நீங்கள் ஒரு பிரசங்கியாக இருக்க வேண்டியதில்லை; நீங்கள் தேவனுடைய மகிமைக்காக ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறீர்கள். நினைவிருக்கட்டும், நித்திய காரியங்களே என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கின்றன, அது, ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுதலேயாகும். உங்களுடைய எல்லா கிரியைகளிலும், உங்களுடைய எல்லா கருத்துக்களிலும், உங்களுடைய எல்லா நோக்கங்களிலும், அதுவே முதல் காரியமாய் இருக்கட்டும். 36 நேற்றைய தினம், ஒரு தாயினுடைய கரத்தைப் பற்றிக் கொண்டு, என் கரம் அவளைச் சுற்றிப் பிடித்திருக்க, அவளுடைய தாடை நடுங்கினது....... 37 அவளுடைய பையன் அங்கே மரித்துக் கொண்டிருக்க, அவள், "பில்லி, நீ மீண்டும் கூடாரத்திற்கு வர வேண்டும் என்று நான்-நான் ஏங்கி, ஏக்கங்கொண்டிருக்கிறேன்" என்றாள். 38 நான், "சகோதரி பெர்கர்ஸன், நான்-நான் அதைச் செய்ய விரும்புகிறேன்" என்றேன். அவள் கூறினாள்...நான், "சரி, பாருங்கள், சகோதரியே. ஒரு வருடத்தில் ஐம்பது ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டிருக்கக் கூடுமானால், அது ஒரு வருடத்திற்கு நல்ல பயிராக இருக்கும். அவர்களில் ஒரு இலட்சம் பேரை என்னால் வேறொரு தேசத்தில் காப்பாற்ற முடியும். பார்த்தீர்களா?" 39 நான் மகிமைக்குள் நடக்கும்போது, நான்...தேவன் என்னை ரட்சிப்பார். அவர் என்னை இரட்சித்தார். அது தீர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் அதைக் குறித்த காரியம் என்னவெனில், நான் அங்குச் செல்லும்போது, நான் சுற்றும் முற்றும் பார்த்து, நட்சத்திரங்கள் பிரகாசிப்பதைக் காண விரும்புகிறேன். ஆமென். நான்-நான் ஒன்றைக் காண விரும்புகிறேன், அது ஒன்றை உண்டாக்குகிறது. 40 நான்-நான் மரித்திருந்தால், நான் ஒரு மகத்தான மனிதனாயிருந்திருந்தால், லிங்கனைப் போன்ற ஒரு ஜனாதிபதியாக அல்லது அதைப் போன்ற ஒரு காரியத்தை அவர்கள் பெரிய நினைவுச் சின்னத்தைக் கட்டுவார்கள்; ஆனால் ஒரு நாள் அது இருக்காது. ஆனால் ஒரு ஆத்துமா மகிமையில் இரட்சிக்கப்பட்டால், ஒரு நித்தியம் உருண்டோடிக்கொண்டிருக்கும் வரை, உங்களுடைய பெயர் அதில் சுற்றப்பட்டிருக்கும். சரி, நாம் இப்பொழுது ஜெபிப்போமாக. 41 எங்கள் பரலோகப் பிதாவே, இந்தக் காலையில் நாங்கள் மிகவும் தாழ்மையாய் உம்மண்டை வருகிறோம். தேவனே, நான் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், விழித்தெழுந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், உண்மையில் சந்தோஷம் என்பது இந்த உலகப் பொருட்களில் இல்லை என்பதுதான். அது எங்களுடைய ஆத்துமாவில் எங்களைச் சந்தோஷப்படுத்துகிற நித்தியமான காரியங்களைக் கொண்டதாயிருக்கிறது. 42 நான் இந்தக் காலையில் எவ்வளவு நன்றியுள்ளவனாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்புக்காகவும், உம்முடைய கிருபைக்காகவும், கர்த்தாவே, சுமார் பத்து இலட்சம் ஆத்துமாக்கள் பீடத்தண்டை முழங்காற்படியிடுவதைக் காண அது என்னை அனுமதித்துள்ளது. ஓ, தேவனே, ஏதோ ஒரு மகிமையான நாளில், நான் அக்கரையைக் கடக்கும்போது, அவர்கள் யாவரும் அங்கே நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பதைக் காண்பேன் என்று நான் நம்புகிறேன். இங்குள்ள என் சகோதரர்கள், என் சகோதரிகள், இந்தக் காலையில், ஒவ்வொருவரும் அதே விதமாக உணருகிறார்கள். கர்த்தாவே, தங்களுடைய ஜெபங்களினாலும், வேண்டுதல்களினாலும், தேவனைப் பற்றிக் கொண்டதினாலும்; ஜெபித்தல், மற்றவர்களிடம் பேசுதல், தேவனுடைய காரியங்களைக் குறித்து உயர்வாகப் பேசுதல் மூலம் அவர்கள் அதில் ஒரு பாகமாயிருந்தனர். 43 இன்றைக்கு தேவனே, அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாத எவரேனும் இங்கிருந்தால், அல்லது அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டியபடி இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இது அவர்களின் ஒரே அழியாத, உம்மைச் சேவிக்க, நித்திய தீர்மானம் எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். பிதாவே, இதை அருளும். 44 இங்குள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும், அவர்களுடைய இருதயம் அவர்களுக்குள்ளே கொழுந்துவிட்டு எரியட்டும், வேலிகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு வெளியே எங்கோ சென்று, இழக்கப்பட்ட ஆத்துமாக்களை உள்ளே கொண்டு வர, அது எவ்வளவு தாழ்மையாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் ஒரு ஆத்துமாவை உள்ளே கொண்டு வரலாம், அது பத்து இலட்சம் அதற்குப் பின்னால் கொண்டு வரும். நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் அறியோம். சில நேரங்களில் கர்த்தாவே, இந்தச் சிறிய தாய்மார்கள் யோசிக்கின்றனர், ஆனால் அவர்கள் எதைக் குறித்து பேசுகிறார்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் ஒரு வாலிப நபரிடத்திலோ அல்லது ஏதோ ஒரு வயோதிக நபரிடத்திலோ அல்லது அவர்களுடைய ஆத்துமாவைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தோடு பேசிக்கொண்டிருக்கும்போது. கர்த்தாவே, அருளும். 45 இப்பொழுது வார்த்தைக்குள் வரட்டும். கர்த்தாவே, நீர் வார்த்தையில் இருக்கிறீர். இன்றைக்கு, எங்களுடைய ஜீவியங்களில், எங்களுடைய சரீரங்களில், வார்த்தை ஜீவிக்கச் செய்யவும், செயல்படவும் எங்களுக்கு விசுவாசத்தை தாரும். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் அவருடைய மகிமைக்காக வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 46 அது டுவைட் மூடிதானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அது பாஸ்டனில் செருப்புத் தைக்கும் தொழிலாளி என்று நான் நினைக்கிறேன், ஒரு நாள்...ஒரு சிறு பெண், ஆரம்ப மெதோடிஸ்டு நாட்களில், அவள் கர்த்தருக்காக ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய விரும்பினாள். எனவே, அவள் சலவைத் தொழில் செய்து, அவள் தன்னுடைய பணத்தை சேமித்து, ஒன்றரை டாலர்களை எடுத்து வைத்திருந்தாள் அவளுக்காகப் பிரசங்கிக்க ஒரு வயோதிக பிரசங்கியார் வருவதற்கு என்று நான் நினைக்கிறேன். அவள் அன்றிரவிற்காக ஒரு குதிரை லாயத்தை கால் டாலருக்கு அல்லது ஏதோ ஒரு விலைக்கு ஒரு தொழுவத்தை வாடகைக்கு எடுத்திருந்தாள். தொழுவத்தை சுத்தப்படுத்தி, ஒரு பீடத்திற்காக அந்தச் சிறிய கழுவும் இருக்கையைக் கீழே வைத்தாள். 47 இப்பொழுது இல்லத்தரசிகளாகிய உங்களுக்கு, அது எவ்வளவு எளிமையாயுள்ளது என்பதை உங்களுக்குக் காண்பிக்கவேயாகும். பார்த்தீர்களா? நீங்களோ, "ஓ, சகோதரன் பிரான்ஹாமே, என்னால் பிரசங்கிக்க முடிந்தால் நலமாயிருக்குமே!" என்று கூறலாம். நீங்கள் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் அப்படியே...நீங்கள் ஒரு சாட்சியாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு தூண்டுதலாய் இருக்கிறீர்கள்; உங்களுடைய ஜீவியம். 48 அவள் சில துண்டுப்பிரதிகளை எடுத்துக்கொண்டு மூலைக்குச் சென்று கூட்டத்தைக் குறித்து விளம்பரப்படுத்தி, அவைகளை விநியோகம் செய்தாள். ஒவ்வொரு முறையும் யாராவது அதைக் கையில் வாங்கும்போது, அவர்கள் அதைக் கீழே எறிந்து விடுவார்கள். "பரிசுத்த உருளையே! மதவெறியன்!" என்பார்கள். நடந்து சென்று விடுவார்கள். பார்த்தீர்களா? 49 ஒரு சிறு பையன் கிழிந்த கால்சட்டையுடன் வந்தான். அவருடைய தகப்பனாரின் தோள்பட்டையிலிருந்து தொங்கும் நாடவோடு கூடிய கால் சட்டையுடனும், அவனுடைய முகத்தில் முடி தொங்கிக் கொண்டிருந்தது. "பெண்மணியே, நீர் என்ன கொடுத்துக் கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டான். "மகனே, ஒரு துண்டுப்பிரதி" என்றாள். அவள் அதை அந்தவிதமாக அவனிடம் கொடுத்தாள். அவன் அதைப் பார்த்துவிட்டு, "என்னால் படிக்க முடியாது" என்றான். "சரி, இன்றிரவு இங்கே ஒரு கூட்டம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது" என்றாள். "ஓ", "அது நடக்குமா? நான் வருவதற்கு நீங்கள் ஆட்சேபிக்கிறீர்களா?" என்றான். "நீ வர விரும்புகிறாயா? தேனே, உன்னால் முடிந்தால் நீ வர வேண்டும்" என்றாள். "சரி, நான் வருவேன்" என்றான். 50 அந்த இரவு, அவளுடைய எல்லா முயற்சிகளுக்கும் பிறகு, பலவீனமாக இருந்தது. அந்த வயோதிக உண்மையுள்ள ஊழியக்காரர் வந்து, பிரசங்க பீடத்தண்டை சென்று ஜெபித்தார். அவரும் அந்தப் பெண்மணியும் பாடினர், அவருடைய கூட்டத்தாரை போல அவள் அமர்ந்து கொண்டாள். 51 சிறிது நேரம் கழித்து, அந்தச் சிறு பிள்ளை கந்தலான தோற்றமுடையவனாய், அவனுடைய முகத்தில் தலைமுடி தொங்கிக்கொண்டிருந்தது. அது யாரென்று உங்களுக்குத் தெரியுமா? டுவைட் மூடி. அன்றிரவு, அவர் பீடத்தண்டை முழங்காற்படியிட்டார்; பத்து இலட்சம் ஆத்துமாக்களை தேவனிடத்தில் அனுப்பினார். பார்த்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. இயேசுவுக்காகக் கொஞ்சம் பேசுங்கள் சாட்சி பகருங்கள், பாடுங்கள் அல்லது ஜெபியுங்கள், தண்ணீரின் மேல் உள்ள அப்பம் போல அது என்றோ ஒரு நாள் உங்களிடம் திரும்பி வரும். அது உண்மை. சரி. நினைவிருக்கட்டும், தவறிப்போகாதீர்கள், தவறிப்போகாதீர்கள்; சில ஆத்துமாக்களை வெல்வோம்! நீங்கள் என்ன செய்தாலும், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துங்கள். இந்தக் காலையில் இங்குள்ள எங்களுடைய ஜனங்களைக் காண்பதில் நான்-நான் மகிழ்ச்சியடைகிறேன், எனக்குத் தெரிந்தவரை அவர்கள் எவருமே வறுமையில் இல்லை; எல்லோரும் நல்ல ஆடைகளை அணிந்து, நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள்; அறிவார்ந்த தோற்றமுடைய ஜனங்கள். நீங்கள் அந்த விதமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள நான் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 53 நண்பர்களே, ஒரு சமயம், பொருளாதாரம் மந்த நிலைமையின்போது, நான் இங்கு வந்து, நான் பணி ஆடையில் பிரசங்கித்தேன். நீங்கள் மைல்கணக்காக நடந்து இங்கே, தேசத்தைக் கடந்து வந்தீர்கள், புசிக்கக் கூடப் போதுமானதில்லை. எனக்குத் தெரியும். அது உண்மை. எனக்கு அது நினைவிருக்கிறது. தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார், நாங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், பாருங்கள். 54 ஆனால் இந்தக் காலையில், பாருங்கள், இந்தக் காலையில் நீங்கள் எப்படி வித்தியாசமாகக் காணப்படுகிறீர்கள், அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன், ஆனால் அது உங்களை ஒருபோதும் தடுத்து நிறுத்த வேண்டாம். அது எங்கிருந்து வந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலிருந்தே. ஒரு ஆத்துமாவை ஆதாயப்படுத்தினால், அது என்றென்றும் நிலைத்திருக்கும். உங்களில் ஒரு பெரிய பகுதியினர் எங்கோ ஒரு சிறு வங்கிக் கணக்கை வைத்திருக்கலாம். நான் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன், தேவன் அதை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆனால் அது ஒரு ஆத்துமாவை ஆதாயப்படுத்தும் உங்களுடைய வழியில் நிற்க அனுமதிக்காதீர்கள். அது உண்மை. முதலில் ஆத்துமாக்களை காத்துக் கொள்ளுங்கள். 55 இப்பொழுது நான் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்...நான் சகோதரன் நெவில் அவர்களிடம் கேட்டேன். உங்களுக்குக் குறிப்பிட்ட ஞாயிறு பள்ளி பாடம் இல்லை எனவே நாம் வேதத்தில் எங்கிருந்தும் போதிக்கிறோம். இந்தக் காலையில், நான் கீழே வந்து கொண்டிருந்தபோது, கற்பிப்பதைப் பற்றி யோசித்தேன், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தின் பேரில், நான் அறைக்குள் பிரவேசிக்கும் முன்னே. 56 அப்பொழுது வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தின் பேரில் ஒரு-ஒரு தொடர் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்புவது எனக்கு நினைவிற்கு வந்தது. சார்லஸ் புல்லர், ஒரு-ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சகோதரன் புல்லர் தாமே மாதிரிகளை ஒப்பிடுகிற ஒருவர். நாம் ஒருவிதமாக அதன் பேரில் ஒன்று கூடிவிடுவோமோ என்று நான் பயந்தேன், நீங்கள் அதைக் குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 57 ஆகையால் நாம் எபிரெய புத்தகத்திற்கு செல்லலாம் என்று நான் நினைத்தேன். ஒரு நல்ல...எபிரெய புத்தகத்தை எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? ஓ, இது ஒரு மகத்தான...நாம் கிட்டத்தட்ட 10-ம் அதிகாரத்திற்கு செல்வோம். அது ஒரு அழகான அதிகாரம் என்று நான் நினைக்கிறேன். நான் எப்பொழுதாவது அதன் பேரில் போதித்திருக்கிறேனா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அநேகமாக, அதன் ஒரு பகுதி, இங்கே, இருக்கலாம். வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வசனங்களைப் எடுத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது அது அதைத் தீர்த்து வைக்கிறது, நாம் வேதத்திலிருந்து துவங்குவோம். 58 உங்களுக்குத் தெரியும், சில சமயங்களில், நான் ஒரு விடுமுறைக்காக வரும்போது, இன்னும் ஒரு முறை நான் இங்கு வரும்போது, நான் இந்தக் கூடாரத்திலோ அல்லது இங்கே எங்காவது தங்கி, ஒரு தொடர் ஆய்வினை நடத்த ஆவல் உள்ளவனாய், இருக்கிறேன், நாம் வழக்கமாக வேதாகமத்தை எடுத்துப் பார்ப்பது போல. ஒரு குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ளது போன்று, அப்படியே சென்று, இந்தவிதமாக வேதவாக்கியங்களினூடாக அதை முன்னும் பின்னுமாக அலசிப் பாருங்கள். அது நம்முடைய விசுவாசத்தை நிலைநிறுத்தி ஸ்திரப்படுத்துகிறது. அதற்காகவே இந்தப் பாடங்கள் நம்முடைய விசுவாசத்தை ஸ்திரப்படுத்துகிறதற்காகவே உள்ளன. 59 இப்பொழுது, எபிரெயர் 10-ம் அதிகாரத்தில். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன், நான் அதற்குத் திரும்பினேன். நாம் ஒரு சிறு பாடத்திற்காக இங்கிருந்து வாசித்து, அதைப் போதிக்க விரும்புகிறோம். நாம் இங்கு ஆய்ந்து பார்ப்போமானால், நாம் இதற்கு முன்பு இதற்குள்ளாக இருந்து வந்திருக்கிறோம் என்று கண்டறிந்தால், அப்பொழுது நான்...நாம் வேறு ஏதோ ஒன்றிற்கு திருப்புவோம், அல்லது ஒருவேளை கர்த்தர் நம்மை வேறு ஏதோ காரியத்திற்கு வழி நடத்தலாம். 60 இப்பொழுது இங்கே இன்றிரவு கூடாரத்தில் நடைபெறும் ஆராதனைகளை மறந்துவிடாதீர்கள். சகோதரன் இன்றிரவு நம்மிடம் பேசுவார். அங்கே நியூ ஆல்பனியைச் சுற்றிலும் உங்களுக்கு நண்பர்கள் யாராவது இருந்தால், நாம் சகோதரன் மேத்தனி அவர்களிடத்தில் இன்றிரவு சிறிது நேரம் பேசுவோம், அதன்பின்னர் புதன்கிழமை இரவு பேசுவோம். 61 சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன் அவர்கள், நான் சற்று முன்னர் "ஆமென்" என்று கூறினதைக் கேட்டேன், ஆனால் என்னால் அவரை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கட்டிடத்தில் இருக்கிறார். அவருடையது வியாழன் இரவு, மேலும்-மேலும் அவருக்கு ஞாயிறு இரவும் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஜூனியர், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்னால் உங்களை அந்த இடத்தில் வைக்க முடியவில்லை. ஓ, வியப்பொன்றுமில்லை; நீங்கள் அங்கே பின்னால் உள்ள அந்தப் பெரிய நபரின் பின்னால் அமர்ந்தி ருக்கிறீர்கள். உங்களுடைய...என்ன. வெள்ளி... ஞாயிற்றுக்கிழமை இரவு உங்களுடைய ஆராதனை, அதுவும் கூட, அது ஜூனியர்தானே? (சகோதரன் ஜாக்ஸன், "அது உண்மை" என்கிறார்.) வியாழன் மற்றும் ஞாயிறு. சரி. இன்றிரவு அவருடைய ஆராதனைகள் உள்ளன. அவர் நியூ ஆல்பனியில் உள்ள ஸ்டேட் வீதியில் இருக்கிறார், ஸ்டேட் மற்றும் ("மன்றோ.") மன்றோ. 62 சகோதரன் ஜென்தர் அவர்களே, நீங்கள் பாருங்கள், நான் அளவீடுகளை வாசித்து அல்லது சரி செய்யும் எந்தச் சேவைகளிலும் இருந்தது நீண்ட காலமாகிவிட்டது. நான் எல்லா தெருக்களையும் மறந்துவிட்டேன். ஆனால் ஒரு...அந்நாட்களில் எனக்கு உதவி செய்த அதே கர்த்தராகிய இயேசுவை நான் இன்னமும் நேசிக்கிறேன். 63 நான் சற்று முன்னர் ஒரு சகோதரனிடம் கூறிக்கொண்டிருந்தேன். நான் அளவைக் கருவியில் வாசிக்கும்போது வழக்கமாக அங்குச் சென்று கதவைத் தட்டுவது வழக்கம். அளவைக் கருவியில் படித்துவிட்டு, என்னுடைய வேதாகமத்தை வெளியே எடுத்து, அந்தப் பெண்மணி வாசலண்டை வருவதற்கு முன்பு, அதைப் போன்ற ஏதோ ஒன்றைப் படித்தேன். ஒரு சிறிய பழைய காலியான கட்டிடத்தைக் கண்டறிந்தேன். நிச்சயமாகவே, யாரோ ஒருவர் இடம் பெயர்ந்து சென்ற இடத்திலிருந்து, நீங்கள் அவைகளை இப்பொழுது கண்டறிய முடியாது. அங்கே உள்ளே சென்று, ஒரு கொட்டகைக்குள் திரும்பிச் சென்று, முழங்காற்படியிட்டு ஜெபிப்பேன். அது அந்த விதமான அமைப்பாயிருந்தது, அதுவே அவரை நோக்கிப் பார்க்கும்படியாக ஸ்திரப் படுத்தப்பட்ட காரியமாய் இருந்தது. 64 இப்பொழுது, எபிரெய புத்தகம் நியாயப்பிரமாணத்திற்கும் கிருபைக்கும் இடையேயுள்ள பிரிவினையாயிருக்கிறது. நாம் நியாயப்பிரமாணத்தினால் அல்ல, கிருபையினால் வாழ்கிறோம் என்பதை எத்தனைப் பேர் அறிவீர்கள்? அந்த எழுத்தாளன்... யாருக்கும் சரியாகத் தெரியாது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது பவுல் எழுதியதைப் போலவே உள்ளது, நான் அதைப் பவுலின் நிரூபம் என்று அழைக்க விரும்புகிறேன். அவன் எபிரெயர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தான். 65 இப்பொழுது, யூதர்கள் அதைப் புறக்கணித்த காரணத்தால், சுவிசேஷமானது ஏற்கனவே புறஜாதிகளுக்கு சென்றுவிட்டது. அவர்கள் புறஜாதியாரிடம் சுவிசேஷத்தோடு சென்றிருந்தனர். இப்பொழுது பவுல் எபிரெயர்களுக்கு எழுதிக்கொண்டிருந்தான், ஏனென்றால் அவர்களில் அநேகர் நியாயப்பிரமாணத்தின் கீழ் திரும்பி வர விரும்பினர், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, கிறிஸ்துவில் இன்னமும் விசுவாசியுங்கள். 66 அது இன்றைக்கும் இருந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பழைய ஏற்பாட்டின் பிரமாணத்தைக் கைக்கொள்ள முயற்சிக்கும் ஜனங்கள் இன்றைக்கு உண்டு, இன்னமும் கிறிஸ்தவர் களாயிருக்கிறார்கள், ஒன்று மற்றொன்றுக்கு மிகவும் முரணாய் இருக்கும்போது. நீங்கள் நியாயப்பிரமாணத்தின் ஒரு பாகத்தைச் செய்தால், நீங்கள் அவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும். வேதம், "நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்ய நீங்கள் கடனாளியா யிருக்கிறீர்கள்" என்று கூறுகிறது. மேலும், அப்படியானால், நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டால், பலிகளையும், ஓய்வு நாட்களையும், கடமைகளையும், புசிப்புகளையும், நியாயப் பிரமாணத்தின் கீழ் கழுவுதல் போன்றவற்றையும் கைக்கொள்ள வேண்டும். 67 ஆனால் நாம் இப்பொழுது நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை. நாம் கிருபையின் கீழ் இருக்கிறோம். நியாயப்பிரமாணம் ஒரு நிழலாயிருந்ததை பவுல் காண்பிக்க முயற்சிக்கிறான். இப்பொழுது, துவக்கத்தில், இங்கே நாம் அதைப் பார்க்கிறோம். 68 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப் படுத்தமாட்டாது. ஓ, என்னே! அது அங்கே ஒரு பிரசங்கமாக அமைந்துவிடாதா? பார்த்தீர்களா? பார்த்தீர்களா? இப்பொழுது, நியாயப்பிரமாணம் வரப்போகும் காரியங்களின் நிழலாய் இருந்தது. 69 நாம் ஒரு நிமிடம் இங்கே வருவோம். என்னோடு திரும்பவும்... அது வெளிப்படுத்தின விசேஷம் 12-ம் அதிகாரம் என்று நான் நினைக்கிறேன். நாம் அதைப் பற்றிச் சற்று நேரம் ஆராய்ந்து பார்த்து, நாம் இங்கே சிறிது நன்மையான ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லையா என்று பார்ப்போம், "நிழலைக்" குறித்து சிந்திப்பதிலிருந்து துவங்க வேண்டும். இப்பொழுது நாம்-நாம் மீண்டும் வாசிப்போம், இப்பொழுது வேதாகமத்தோடு உள்ள நீங்கள். அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ... 70 வேதாகமத்தில் ஸ்திரீ எதைக் குறிக்கிறாள்? சபை. ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், (அது அவள் அணிந்திருந்த அவளுடைய வஸ்திரம், பாருங்கள்), அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளை பெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். 71 கவனியுங்கள், வெளிப்படுத்துபவனாகிய யோவானின் தரிசனத்தில், ஆகாயத்தில் ஒரு ஸ்திரீ தோன்றினாள். மேலும்... அவள் சூரியனை அணிந்திருந்தாள். சந்திரன் அவள் பாதங்களின் கீழ் இருந்தது. அவளுடைய கிரீடத்தில் பன்னிரண்டு நட்சத்திரங்கள் இருந்தன. 72 இப்பொழுது அந்த அடையாளம் என்ன செய்கிறது? தரிசனங்கள் அடையாளங்களாக இருக்கின்றன. இப்பொழுது, ஸ்திரீ சபையாயிருக்கிறாள். சபையோ...அவளுடைய பாதத்தின் கீழே சந்திரன் இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், அது இன்னமும் பிரகாசித்துக் கொண்டிருந்தது, ஆனால் அவள் அதற்கு மேலாக இருந்தாள். ஏனென்றால் அவள் ஏற்கனவே ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு நிலைமைக்குள்ளாகிவிட்டாள். அவள் பிரசவவேதனை பெற்றுக்கொண்டிருந்தாள். சந்திரன் மறைந்து கொண்டிருந்தது, சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது, சந்திரன்... 73 எது சந்திரனை ஒளிக்க வைக்கிறது, அதன் மீது பிரகாசித்த சூரியன்தான். அது சூரியனின் ஒரு நிழல். ஆகையால், சந்திரன் பகல் பொழுதைக் கழித்தது, சூரியன் உதித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண் சந்திரனை அணிந்திருக்கவில்லை. அவள் சூரியனை உடுத்தியிருந்தாள்; அது சுவிசேஷ சபையானது நிலைத்திருக்க வேண்டியதாயிருந்தது. பண்டைய வைதீகமான சபை... இப்பொழுது, நீங்களோ, "பாருங்கள், அது வைதீகமானவர்களா?" என்று கேட்கலாம். ஆம். 74 இயேசு முதலில் யூதர்களிடம் வந்தார், புறஜாதிகளிடம் அல்ல. பார்த்தீர்களா? அவர், அவர் தம்முடைய சீஷர்களை எந்தப் புறஜாதியாரிடமும் செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். அவர், "அவர் தமக்குச் சொந்தமானவர்களிடத்தில் வந்தார், அவருக்குச் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" என்றார். என்ன? பரிசுத்த மத்தேயு 10-ம் அதிகாரத்தில் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே அவர் கூறினார். அவர், "புறஜாதியாருடைய வழியிலே போகாமல், காணாமற்போன இஸ்ரவேலின் ஆடுகளிடத்திற்குப் போங்கள். நீங்கள் போகையில், பரலோக இராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கியுங்கள்" என்றார். பார்த்தீர்களா? "சமாரியா பட்டணத்தின் வழிகளில் செல்லாதிருங்கள், அல்லது மற்றெந்த வழியிலும் செல்லாதீர்கள், ஆனால் காணாமற்போன இஸ்ரவேலின் ஆடுகளிடத்திற்கு முதலாவது செல்லுங்கள்" என்று கூறினார். 75 அந்தக் காரணத்தினால்தான் மகிமையான சூரிய ஒளி அந்தப் பெண்ணைச் சுற்றிப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவள் வேதனைப்பட்டு, பிரசவவேதனையடைந்து, இந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க: சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்;... .........அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, (ரோமாபுரி) அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. 76 ரோமாபுரி அந்தப் பிள்ளையைத் துன்பப்படுத்தியது. அவர்கள் ஆட்களை அனுப்பி, இரண்டு வயது முதல்...இல்லை, சரியாகக் கூறினால், அவர்கள் இரண்டு வயது முதல் அனைத்து குழந்தைகளையும், அதாவது அவர்கள் கிறிஸ்துவைக் கொன்று, அவரை அங்கே பிடித்துக் கொள்ள வேண்டும். ஏரோது இந்தப் பிரச்சினையை எழுப்பினான். ....ஆனால் அந்த ஸ்திரீயின் அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும்...எடுத்துக்கொள்ளப்பட்டது. 77 உயிர்த்தெழுதலிலிருந்து, "தேவனிடத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்." இப்பொழுது, அது "ஆண் பிள்ளை" உபதேசம் முழுவதையும் அவிழ்த்துவிடும். அது அவ்வாறு இருக்குமல்லவா? பார்த்தீர்களா? 78 ஆனால் இப்பொழுது, "நியாயப்பிரமாணம்," எபிரெயர் 10, மீண்டும், "வரப்போகிற காரியங்களின் நிழலை உடையதாயிருக்கிறது," அந்தச் சொரூபம் அல்ல, ஆனால் நிழலே. 79 இப்பொழுது, அன்றொரு இரவு, நான் ஒரு அருமையான நபருடன் ஆயிர வருட அரசாட்சியின் உபதேசத்தைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். நான், "நான் ஆயிர வருட அரசாட்சியை விசுவாசிக்கிறேன், ஏனென்றால் பழைய ஏற்பாட்டின் நிழல்கள் அதிகமாக உள்ளன, ஒரு ஆயிர வருட அரசாட்சி இருக்கும் என்று உரைக்கிறது. இருக்க வேண்டும். மிக அதிகமான நிழல்கள்!" அவர்கள், "சபையானது உபத்திரவ காலத்தினூடாகச் செல்லுமா?" என்று கேட்டனர். 80 நான், "இல்லை. சபையானது உபத்திரவ காலத்திற்குள் செல்ல முடியாது, அது உபத்திரவ காலத்திற்கு முன்னர் செல்ல வேண்டும். மிக அதிகமான நிழல்கள்!" பாருங்கள், அதாவது, நோவா, ஆதியில், நோவா..."பழைய ஏற்பாடு முழுவதும், நியாயப்பிரமாணம் யாவும் வரப்போகும் நன்மைகளின் நிழலாயிருந்தன" என்றேன். 81 இப்போது, உபத்திரவ காலம் வருவதற்கு முன்பு, முதலில், ஏனோக்கு...நோவா, என்பவர் உபத்திரவத்தினூடாகக் கொண்டு செல்லப்பட்டதற்கு மாதிரியாய் இருந்தான், புத்தியில்லாத கன்னிகளைப் போல, ஆனால் ஏனோக்கு உபத்திரவம் வருவதற்கு முன்னர் மறுரூபப்படுத்தப்பட்டான். "ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான், தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினால் அவனைக் காணப்படவில்லை," சபையானது எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னடையாளமாயுள்ளது. நோவா அவனைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் ஏனோக்கு செல்வதைக் கண்டபோது, பேழைக்குள் பிரவேசிக்க வேண்டிய நேரமாயிருந்தது என்பதையும், உபத்திரவத்தினூடாகக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். 82 வேதம், "மணவாளனைச் சந்திக்க பத்து கன்னிகைகள் புறப்பட்டுச் சென்றனர்; ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாத வர்களுமாயிருந்தனர். அவர்கள் அனைவரும் கன்னிகை களாயிருந்தனர், ஒவ்வொருவரும். ஆனால் ஐந்துபேர் புத்தியுள்ள வர்களாயிருந்தனர், அவர்கள் தங்களுடைய விளக்கில் எண்ணெயை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் மணவாளனை சந்திக்க புறப்பட்டுச் சென்றனர். மணவாளன் வந்தார், எண்ணெய் வைத்திருந்தவர்கள் உள்ளே சென்றார்கள்." பாருங்கள், எடுத்துக் கொள்ளப்படுதல், மணவாளனோடு செல்வது. 83 ஆனால் பின்னால் விடப்பட்டிருந்தவர்களும் கூட உள்ளே வர விரும்பினர். பேழையின் கதவை வந்து தட்டினவர்கள், "நோவா, எங்களை உள்ளே அனுமதி" என்று கூறினது போல, ஆனால் தேவன் கதவை அடைத்தார். 84 மேலும், ஓ, என்னுடைய நண்பனே, இந்நாட்களில் ஒன்றில், தேவன் உனக்கு உன்னுடைய கடைசி அழைப்பைக் கொடுக்கப் போகிறார். அப்பொழுது இரக்கத்திற்கும் நியாயத்தீர்ப்பிற்கும் இடையேயுள்ள வாசல் அடைக்கப்படப்போகிறது. கைவிடப்படாதீர்கள். உங்களால் முடிந்தவரை இப்பொழுது உள்ளே வாருங்கள். உலகம் என்னக் கூறுகிறது என்பதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம். கிறிஸ்துவுக்குள் பிரவேசியுங்கள். "கிறிஸ்துவுக்குள் இருக்கிறவர்களை தேவன் அவரோடு கொண்டு வருவார்." பார்த்தீர்களா? அதன்பின்னர், இந்தப் புத்தியுள்ள கன்னிகை எடுத்துக் கொள்ளப்படுதலில் போய்விட்டாள். 85 இந்த மற்றவர்களும் வந்து கதவைத் தட்ட, என்ன சம்பவித்தது? என்ன சம்பவித்தது? வேதம், "அவர்கள் புறம்பான இருளில் தள்ளப்பட்டனர், அங்கே அழுகையும் புலம்பலும் பற்கடிப்பும் உண்டாயிருந்தன" என்று கூறியுள்ளது. 86 இஸ்ரவேலர், எகிப்தில் உபத்திரவ காலம் வந்தபோது, எகிப்தில் எந்த ஒரு காரியமும் சம்பவிக்கவில்லை...இஸ்ரவேலர், ஏனென்றால் அவர்கள் தேவனால் அருளப்பட்ட கோசேன் என்ற இடத்தில் இருந்தனர். உபத்திரவங்களே இல்லை. பார்த்தீர்களா? மற்றவர்கள் உபத்திரவ காலத்தில் இருந்தனர், ஆனால் இந்த இவர்கள் அல்ல. 87 இப்பொழுது, அந்த எல்லாக் காரியங்களும் நிழல்களாக இருப்பதால், அவைகள் ஏதோ ஒரு காரியத்திற்கு மாதிரியாக இருக்க வேண்டும். அதன்பின்னர் நாம் கர்த்தருடைய முன்வருகையைக் காணும்போது, அந்நாட்களில் ஜனங்கள் எப்படி நடந்தனர் என்பதையும், ஜனங்கள் எப்படி நடந்துகொண்டனர் என்பதையும் நாம் காண்கிறோம். "துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்." அந்தவிதமாகத்தான் அது இன்றைக்கும் உள்ளது. மனிதர்கள் தங்களுடைய சொந்த தேவபக்தியற்ற இச்சைகளின்படியே நடந்து கொண்டிருக்கிறார்கள். அது காரியமாகிவிட்டது...என் சகோதரிகளே, இந்த விதமாக வெளிப்படுத்திக் கூறுதலை மன்னிக்கவும். ஆனால் நம்முடைய ஜனங்களிடையே, உண்மையான ஒழுக்கக் கண்ணியம் என்பது கிட்டத்தட்ட கடந்த காலத்துக்குரிய ஒரு காரியமாக ஆகுமளவிற்கு வந்துள்ளது. 88 நேற்றைய தினம், செயிண்ட் எட்வர்ட்ஸ் மருத்துவமனையில், ஒரு மருத்துவர் அங்கிருந்த ஒரு பெண்ணைத் கடுமையாகக் கண்டித்ததை நான் கேட்டேன். அவர் படிகளில் எறியபோது நான் அவருடைய கரத்தைக் குலுக்கினேன். மருத்துவமனையில் உள்ள யாவரும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டுமிருந்தனர். அங்கே பின்னால் ஒரு பெண் இருந்தாள், இந்தச் சிறிய, பழைய தேவபக்தியற்ற ஆடைகள், சிறிய கால்சட்டைகள் போன்ற ஆடைகள். 89 அதைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர், "ஒரு புருஷனைப் போன்று கால் சட்டைகளை ஒரு ஸ்திரீ அணிவது தேவனுடைய பார்வையில் அருவருப்பானது" என்கிறார். சரி. 90 அங்கே அவள் நடந்து கொண்டிருந்தாள்...மருத்துவர் கூறினார்... ஒரு சிறிய, ஊனமுற்ற நபர். எனக்கு அவரைத் தெரியும், ஆனால் அவருடைய பெயரை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. அதற்கு அவர், "அந்தவிதமாக இந்தச் சகோதரி உங்களை இந்த மருத்துவமனையில் அனுமதிக்கும்படி நீங்கள் என்னிடம் கூறுகிறீரா?" என்று கேட்டார். மேலும், "ஏன், நீ மருத்துவமனைக்கு ஒரு அவமானம். இங்கிருந்து வெளியே போ" என்றார். நான், "பையனே, நான் உன்னுடைய கரத்தைக் குலுக்க விரும்புகிறேன்" என்றேன். நிச்சயமாக. 91 மேலும், "நீ எப்படி முன்னால் வந்தீர்? இந்தவிதமான உடை உடுத்திக்கொண்டு இங்கே வருவதற்கு, உன்னைக் குறித்து நீ வெட்கப்படவில்லையா?" என்று கேட்டார். 92 நான், "ஓ, சகோதரனே, அது சரியே" என்று எண்ணினேன். அவன் யாராயிருந்தாலும் சரி, "சரி" என்றும், தவறை "தவறு" என்றும் அழைக்கப் போதுமான தைரியமுள்ள ஒரு மனிதனை நான் பாராட்டுகிறேன். பார்த்தீர்களா? ஆனால், கண்ணியமான காரியம், ஓ, நான்... 93 நீங்கள் என்னை மன்னிப்பீர்கள், நீங்கள் மன்னிக்கமாட்டீர்களா? நான் இங்கே ஒரு நிமிடம் நிறுத்த விரும்புகிறேன். இப்பொழுது, என்னுடைய அருமையான அருமையான நண்பரே, நான் இதைச் சற்று விளக்கிக் கூற விரும்புகிறேன். சகோதரன் பிரான்ஹாம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார் என்று நினைக்க வேண்டாம். நான் அப்படியில்லை. நான் உண்மையை மாத்திரமே கூற முயற்சிக்கிறேன். நான் அறிந்துள்ளபடி, அந்த மகிமையில் என்றோ ஒரு நாள், நான் உங்களுடைய ஜீவியம் கறைபடிந்திருப்பதைக் காண்பேனேயானால், அதன்பின்னர் நான் சத்தியத்தை அறிந்து அதைக் கூறவில்லையென்றால் அதற்குரிய காரணமாக நான் இருந்தேன் என்பதை அப்போது நான் அறிந்து கொள்வேன். இல்லை, நான் அதை என்னுடைய தோள்களிலிருந்து உங்களுடைய தோள்களில் விட்டுவிடுவேன். நீங்கள் உங்களுடைய தீர்மானத்தை எடுங்கள். 94 அந்தவிதமாக உடை உடுத்துகிற நம்முடைய ஸ்திரீகளுக்கு பொல்லாத ஆவி உண்டு. பார்த்தீர்களா? வேதத்தில் ஒரே ஒரு காரியம் மாத்திரமே அதைச் செய்திருக்கிறது. அது ஜனங்களின் ஆடைகளைக் களைந்த பிசாசு. பாருங்கள். இப்பொழுது, நீங்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்று நான் கூறவில்லை; என் அருமை சகோதரியே, நான் அதைப் பொருட்படுத்திக் கூறவில்லை. ஆனால் நீங்கள் இந்நாளின் போக்கில், அப்படிப்பட்ட ஒரு வழியில், நீங்கள் வெறுமனே...மற்றவர்கள் அதைச் செய்கிற காரணத்தால், அது நன்றாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது பிசாசு அதைச் செய்கிறதென்று நீங்கள் உணருகிறதில்லை. நிச்சயமாக, அதுதான். நீங்கள் பிரபலமானவர் அல்ல. நீங்கள் பைத்தியம் பிடித்தவர். இவ்வாறு வெளிப்படுத்திக் கூறுவதற்கு மன்னிக்கவும். சரி, அது உண்மை. நான் பொருட்படுத்திக் கூறுவது என்னவென்றால், நீங்கள் தேவனிடத்திலிருந்து அந்தக் காரியத்தை நிலைகுலையச் செய்யப் பார்க்கிறீர்கள். 95 ஓ, தேவனுடைய பரிசுத்த ஆவி, எப்பொழுதும் மனிதனோடு போராடுவதில்லை. "ஒருவனும் கெட்டுப்போகாமல், யாவரும் மனந்திரும்பும்படிக்கு அவர் சித்தமாயிருக்கிறார்." தேவன் நமக்குத் தைரியத்தை அளிப்பார், அந்த நாளில் பிரசங்கிமார்கள்... இங்கிருந்துதான் அது துவங்கியது, மேடையில் உள்ள உங்களுடைய போதகர் அதைப் பொறுத்துக்கொள்கிறார். அது உண்மை. நீங்கள் வெளியே தள்ளப்பட வேண்டும். நான் ஒரு சபையை உடையவனாயிருந்தால், சபையில் ஸ்திரீகள் அதைச் செய்திருந்தால், உடனே அவர்களைச் சபைப் புத்தகத்திலிருந்து விலக்கப்படுவார்கள். ஆம், ஐயா. சரியாக அங்கேயே, நீங்கள் சரியாகத் துவங்கும் வரையில், சரியாகத் துவங்குங்கள். தேவன் அவர்களைப் பொறுப் பாளியாக்குகிறார். ஆனால் இன்றைக்கு... 96 நான் பரிசுத்த ஜோசப்பிடம் சென்றேன். நான் தொடர்ந்து இந்த மருத்துவமனை அழைப்புகளையும், இந்த அவசர நிலைகளையும் சந்தித்து வருகிறேன். அங்கே ஒரு சிறு குழந்தையைக் காணச் சென்றேன், மரித்துக்கொண்டிருக்கிறது, புற்று நோயினால்...இல்லை சிறுநீரக கோளாறு; இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாத்திரமே ஆன குழந்தை, ஒரு சிறுநீரகம் வெளியே எடுக்கப்பட்டது. எப்படியாய் அந்த ஏழை சிறுவன்... கத்தோலிக்க மருத்துவமனையில் நான் மிகவும் அருமையாகவும், தாராளமாகவும் இருப்பதைக் கண்டேன். 97 நான் ஒரு பிராடெஸ்டெண்டு மருத்துவமனைக்குச் செல்கிறேன், அங்கே மரிக்கும் தருவாயில் இருந்த ஒரு பெண்மணி இருந்தாள், நான் என்னுடைய கரங்களை வைக்கும்படி நடந்து சென்றேன். அங்கே நின்று கொண்டிருந்த போதகர் கூறினார்...அவர் சார்ந்திருந்த அதே ஸ்தாபனத்தைத்தான் நானும் என்பதை அவருக்குத் தெரியப் படுத்தினேன். "ஹூ! நாவ்! வேண்டாம், வேண்டாம், வேண்டாம்! அதைச் செய்யாதீர்கள். அவள்மேல் உன் கையை வைக்காதே" என்றான். அதற்கு நான், "வேதம் கூறியுள்ளது" என்றேன். 98 "ஆ, வெளியே போ!" மேலும், "அந்தக் காரியம் நல்லதல்ல. இல்லை, இங்குள்ள ஒரு சுகவீனமான நபர்மீது நீர் உம்முடைய கரங்களை வைக்க நாங்கள் விரும்பவில்லை" என்றனர். அது எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? 99 அந்தக் காரணத்தினால்தான் கத்தோலிக்க சபையானது ஆயிரக்கணக்கானோரை விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது உண்மை. ஏனென்றால், புராட்டஸ்டெண்டுகள் ஒரு அனுபவத்தைப் பெறும் அளவிற்கு தேவனுக்குள் போதிய ஆழத்திற்குச் செல்லவில்லை, உண்மையான, பண்டைய கால, இருதயத்தில் உணரும் இரட்சிப்பு, தேவனுடைய வல்லமை என்னவென்பதை அறிந்துகொள்வதாகும். அங்குதான் உங்களுடைய சாதாரண வர்க்கம் உள்ளது. அங்கே கர்த்தருடைய வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிற உங்களுடைய நிறைவான வர்க்கம் உள்ளது. ஆமென். அங்குதான் காரியம். 100 கவனியுங்கள், "நியாயப்பிரமாணம் ஒரு நிழலைக் கொண்டுள்ளது." நாம் இப்பொழுது ஒரு நிழலாகக் காண்கிற இந்தக் காரியங்கள் யாவும், நிழல்களாக இருந்தன, இப்பொழுது அவைகள் நேர்மறையாக மாறிக்கொண்டிருக்கின்றன. ஒரு மரம் வளர்ந்து கிளையாக மாறுவது போல; அதன்பின்னர் அது விதையாகி, நிலத்திற்குள் சென்ற அதே விதமான விதையை உற்பத்தி செய்யும். இந்தக் காரியங்கள் யாவும் ஆதியாகமத்திலிருந்து வந்துள்ளன. மேலும், இன்றைக்கு, இப்பொழுது... 101 "ஆனால் நிழலின் கீழ் வந்து தொழுதுகொண்ட இவர்களால் ஒருபோதும் பூரணராக முடியாது." அங்கே அந்த வார்த்தையின் பேரில் நாம் தியானிப்போம். வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற.. அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. 102 நான் விரும்புவதோ இப்பொழுது நீங்கள்..." எதுவுமே பரிபூரணமானது அல்ல" என்று ஜனங்கள் கூறுவதை அனேக சமயங்களில். நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள் அல்லவா? அது உண்மை, நீங்கள் உங்களுடைய சக மனிதனின் பார்வையில் பரிபூரணமாயிருக்க முடியாது. 103 ஆனால் நீங்கள் பரிபூரணமாயிருக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் ஒருபோதும் பரலோகத்திற்கு செல்லமாட்டீர்கள். சரி. இயேசு மத்தேயுவில், பாக்கியவான்கள் என்பதில், பேசுகிறார் என்று வேதம் கூறியுள்ளது; "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்" என்றார். அப்படியானால், நீங்கள் தேவனைப் போலவே பரிபூரணமாயிருக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் இழக்கப்படுவீர்கள். இப்பொழுது நீங்கள் அதை எப்படி செய்யப் போகிறீர்கள்? பார்த்தீர்களா? 104 இப்பொழுது, ஒரு சிறு தவறு, நீங்கள் இழக்கப்படுகிறீர்கள்; ஒரு மிகச் சிறிய குறையானாலும், நீங்கள் போய்விட்டீர்கள்; ஏனென்றால் அந்த ஸ்தலங்களுக்குள் "பரிபூரணத்தை" தவிர வேறொன்றும் பிரவேசிக்க முடியாது. தேவன் சாத்தானை ஒரு சமயம், ஒரு தூதனாக அங்கே வைத்தார், அவன் அதிகாலையின் மகனாக இருந்தான். அவன் தேவனுடைய நன்மையான காரியங்களை எடுத்து, அவைகளை தீமையாகத் தாறுமாறாக்கினான். அதை மீண்டும் செய்யப்போகும் ஒன்றுமே அங்கே பிரவேசிக்காது என்று தேவன் நிச்சயம் கொண்டிருக்கிறார். பார்த்தீர்களா? 105 இப்பொழுது, நீங்கள் பரிபூரணமாயிருக்க வேண்டும். இயேசு, "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்" என்றார். இப்பொழுது, நீங்கள் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து தவறைச் செய்துகொண்டிருக்கும்போது, நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள்? இப்பொழுது, இது பிரமாணத்தை கடைபிடிப்பவர்களுக்குள் ஒருவிதமான தொனியை ஏற்படுத்தும், ஆனால், கவனியுங்கள். அது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதல்ல; அதைத் தேவன் செய்திருக்கிறார். அது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதல்ல; அது அவர் செய்த காரியமாயுள்ளது. பார்த்தீர்களா? நீங்கள் பரிபூரணமாயிருக்க முடியாது; நீங்களாகவே பரிபூரணமாயிருக்க முடியாது. ஆனால், கிறிஸ்துவுக்குள், நீங்கள் பூரணப்படுத்தப் பட்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய சொந்த நற்கிரியைகளிலோ அல்லது நீங்கள் சார்ந்துள்ள உங்களுடைய சொந்த சபையிலோ நம்பிக்கை வைக்கவில்லை, ஆனால் நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறீர்கள். அங்குதான் காரியம். அதுவே உங்களைப் பரிபூரணப்படுத்துகிறது. அதுதான் உங்களுடைய விசுவாசத்தை நங்கூரமிடுகிறது. 106 ஆகையால், அதேவிதமாகத் தெய்வீக சுகமளித்தலின் பேரில், நான் உணரும் விதத்தில் நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நான் அப்படி செய்திருந்தால், நான் இந்தக் காலையில் படுக்கையில் இருந்திருப்பேன். ஆனால் நான் அவருடைய முடிவுற்ற கிரியையின் மேல் நம்பிக்கையாயிருந்துகொண்டிருக்கிறேன். அவர் அதைக் கூறினார்; அவர் அதை வாக்குப்பண்ணினார்; நான் அதை விசுவாசிக்கிறேன். பார்த்தீர்களா? அதுதான். "ஆகையால், நீங்கள் பூரண சற்குணராயிருக்க வேண்டும்." 107 இப்பொழுது, ஓ, நாம் சற்று ஒரு பக்கத்திற்கு வருவோம், ஏதோ ஒன்று என்னுடைய இருதயத்திற்குள் உருண்டது. நான் உங்களை ஒன்று கேட்கட்டும். நாம் இப்பொழுது நியாயத்தீர்ப்பின் நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், மகத்தான நியாயத்தீர்ப்பு அல்ல, ஆனால் சபையின் அழைப்பு. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் பிரிவினையின் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு-ஒரு இழிவான, ஒரு-ஒரு நிற பாகுபாடானது நாட்டில் எழும்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அது அர்த்தமற்றது. ஆனால் ஒரு உண்மையான பிரிவினையின் நேரம் உண்டு; சரியானதிலிருந்து தவறானது. தேவன் தம்முடைய ஜனங்களைப் பிரித்து, அவர்களை வெளியே அழைக்கிறார். சபை என்ற வார்த்தை "பிரித்தெடுக்கப்பட்டது; வெளியே அழைக்கப்பட்டது; பிரித்தெடுக்கப்பட்டது" என்று பொருள்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆமென். வேதம், "அவர்கள் மத்தியிலிருந்து வெளியே வாருங்கள்," என்று கூறுகிறது, "அவர்களுடைய பாவத்திலும் அசுத்தத்திலும் பங்கு கொள்ளாதீர்கள், நான் உங்களை என்னிடத்தில் ஏற்றுக் கொள்வேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள், நான் உங்களுக்குத் தேவனாயிருப்பேன். வெளியே வாருங்கள்!" இது ஒரு பிரிந்து செல்லும் நேரம். "இந்த நாள் நெருங்கி வருவதை நீங்கள் எவ்வளவாய் காண்கிறீர்களோ." 108 ஒரு காலத்தில் நடக்க முயன்ற சபை, அவர்கள் தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டனர், இப்பொழுது அவர்கள் உலகத்தைப் போலவே வாழும் ஒரு பெரிய கூட்டமைப்பாக மாறிவிட்டனர். பாருங்கள், அவர்கள் பழைய ஏற்பாட்டில் செய்ததாக வேதம் கூறியுள்ளது போல, அவர்களும், அவர்களில் அநேகர் அதைச் செய்தனர். தேவன் அவர்களை அழைத்து, அவர்களுக்கு அற்புதங்களையும் அதிசயங்களையும் காண்பித்தார், முழு தலைமுறையும் வனாந்திரத்தில் அழிந்து போனது; அவர்கள் அற்புதங்களைக் கண்ட பிறகு, தேவன் அவர்கள்மேல் அற்புதங்களை நிகழ்த்தியபிறகு, அவர்கள் தேவனுடைய மகிமையைக் கண்ட பிறகு. ஆனால், அவர்களுடைய இருதயத்தில், அவர்கள் அவிசுவாசிகளாக, தேவனை முறுமுறுக்கிறவர்களாக, முறையிடுகிறவர்களாக இருந்தனர். தேவன், "மோசே, உன்னைப் பிரித்துக்கொள்" என்றார். அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் கொண்டு செல்ல அவர் ஒரு புதிய சந்ததியைத் துவங்கினார். 109 கவனியுங்கள். இந்தக் காலையில் இங்குள்ள எத்தனை பேர் கிறிஸ்தவர்கள்? நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தி, உங்களுடைய கரங்களை அப்படியே உயர்த்தி, "நான் ஒரு கிறிஸ்தவன்" என்று கூறுங்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிற படியால், தேவனுக்கு ஸ்தோத்திரம். நீங்கள் எப்படி கிறிஸ்தவர்களானீர்கள்? நீங்கள், "நான்-நான் ஒரு கிறிஸ்தவனாக ஆக விரும்புகிறேன்" என்று கூறின காரணத்தாலா? ஏனென்றால் நீங்கள் கண்ணீரோடு தேவனைத் தேடினதினாலா? ஏனென்றால் தேவன் கிருபையினால் உங்களை அழைத்தார். அது உண்மை. நீங்கள் அவரைத் தேடின காரணத்தினால் அல்ல; ஏனென்றால் அவர் உங்களைத் தேடினார். 110 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், பாப்டிஸ்டு பக்கத்திலோ அல்லது பிரஸ்பிடேரியன், ஆர்மீனிய நம்பிக்கையோ, அவை யாவும் விதைக்குச் செல்கின்றன. அவர்கள், "சரி, தேவன் என்னை, அல்லேலூயா என்று அழைத்திருந்தால், அப்பொழுது நான் சரியாயிருக்கிறேன். நான் விரும்புவதை நான் செய்வேன்" என்கிறார்கள். நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை என்றும், நீங்கள் அழைக்கப்படவில்லையென்றும் அது காண்பிக்கிறது. அது உண்மை. தேவன் உங்களை அழைத்திருந்தால், நீங்கள் அவரை மிகவும் தெய்வீகமாக நேசிப்பதால், உலகத்தின் காரியங்கள் உங்களுக்கு மரித்ததாயிருக்கும். அது உண்மை. 111 அந்த வாலிப நபர் அங்கே பின்னால் அமர்ந்து ஒலிப்பதிவு செய்கிறார். அவர் உள்ளே வந்து, என்னிடத்தில் கேட்டார், இது என்னுடைய...என்னுடைய சகோதரர்களில் ஒருவரான திரு.மெர்சியர். அவர் கூட்டங்களில் செய்திகளைப் பதிவு செய்கிறார், அவருடைய கூட்டாளி; இங்கே பின்னால் உள்ள லியோ மற்றும்- மற்றும் ஜீன். லியோ இன்று காலை உள்ளே வந்து என்னிடத்தில் கூறினார், அவர், "சகோதரன் பிரான்ஹாம் எது முதலில் வருவது; விசுவாசம் அன்பைப் பிறப்பிக்கிறதா அல்லது அன்பு விசுவாசத்தைப் பிறப்பிக்கிறதா?" என்று கேட்டார். 112 நான், "அன்பு விசுவாசத்தை பிறப்பிக்கிறது. விசுவாசம் அல்ல, அன்பு. நீங்கள் விசுவாசங்கொள்ளும் முன்பு, நீங்கள் முதலில் நேசிக்க வேண்டும்." 113 ஆகையால், நீங்கள் விசுவாசத்தைப் பெற்றுள்ளீர்கள் என்று கூறிக்கொண்டு, தெய்வீகரீதியாகத் தேவனை நேசிக்கவில்லை யென்றால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கிறது. பார்த்தீர்களா? நீங்கள் தேவனை நேசிக்க வேண்டும். ஆகையால், நீங்கள் தேசத்தில் உள்ள எல்லா சபைகளிலும் சேர்ந்துகொள்ளலாம், நீங்கள் விரும்புகிற எந்தக் காரியத்தையும் செய்யலாம், நீங்கள் விரும்புகிற எல்லா அறிக்கைகளையும் செய்யலாம்; ஆனால் அசலான, உண்மையான, பரிசுத்த ஆவியானவர், தேவனுக்காக மீண்டும் பிறந்த அன்பு உங்களுடைய இருதயத்தில் இல்லையென்றால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள் என்று நீங்கள் எவ்வளவுதான் அறிக்கை செய்தாலும், அதற்கு இதனோடு எந்தச் சம்மந்தமும் கிடையாது. அது மானிட இருதயத்தில் பிறக்க வேண்டும், அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும், தேவனிடத்திலிருந்து ஒருபோதும் பிரிக்கப்பட முடியாது. 114 இப்பொழுது, எங்களுக்கு நேரமிருந்தால், உங்களில் அநேகர் வேதாகமங்களை வைத்திருக்கவில்லை, ஆனால் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள். உங்களுடைய சிந்தனையை விழித்தெழச் செய்து, உங்களுடைய இருதயத்தைத் திறந்து கொள்ளுங்கள். நான் இப்பொழுது இங்கே ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் அருகில் இருக்கும்போது, நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 115 கடைசி நாளில் அந்திக்கிறிஸ்து வருவான் என்றும், அவன் மிகவும் முரட்டுத்தனமாக இருப்பான் என்றும், வெளிப்படுத்தின விசேஷத்தில் வேதம் கூறியுள்ளது. பரிசுத்த மத்தேயு 24-ம் அதிகாரத்திலும் கூட, இயேசு பேசுகையில், "அந்திக்கிறிஸ்து வரும்போது, தேவனுடைய உண்மையான கிரியையைப் போன்று, அவன்-அவன் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பான்" என்றார். கவனியுங்கள், "தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பான்...' 116 "தெரிந்துகொள்ளப்பட்ட," எங்கிருந்து வருகிறது? "தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்" என்ற வார்த்தையிலிருந்தே. "கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அவன் வஞ்சிப்பான்." பார்த்தீர்களா? ஆனால் அதுவல்ல. அதற்காகத் தேவனுக்கு துதி! அது சாத்தியமில்லை. 117 எபிரெயர் 6-ம் அதிகாரத்தில் உள்ளதுபோல, அவர், "ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்" என்றார். அது முடியாத காரியம். செய்ய முடியாது. அது உண்மை. அது ஆள்மாறாட்டம் செய்யப்படலாம். அது பாசாங்கு செய்யப்படலாம். ஜனங்கள் இன்னார்-இன்னதைப் போன்றே நடந்து கொள்ள முடியும், மேலும் அவர்கள் ஒவ்வொரு சிறு காரியத்திலும் அசைக்கப்பட முடியும். 118 ஆனால் தேவனுடைய ஆவியினால் எப்பொழுதும் பிறந்த ஒரு மனிதன், மனிதன், அவனுடைய-தன்னுடைய போக்கு வடக்கு நட்சத்திரத்தை நோக்கியே அமைந்திருக்கும். அல்லேலூயா! முழு பாதாளமும் அவனை ஒருபோதும் அசைக்காது. அது உண்மை. அவன் தவறு செய்யமாட்டான் என்று நான் கூறவில்லை. அவன் வழுக்கி விழமாட்டான் என்று நான் கூறமாட்டேன். அது உண்மை. ஆனால் மீண்டும் அவன் எழுப்ப முடிந்தவுடனே, அவனுடைய கண்கள் அப்பால் உள்ள அந்த நட்சத்திரத்தின் மேல் வைக்கப்பட்டு, அவன் முன்னேறிச் செல்கிறான். நிச்சயமாக. "தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்!" 119 இப்பொழுது, வேதம் கூறியுள்ளது, அது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை என்று நான் அறிவேன். வேதம் இதைக் கூறியுள்ளது. இப்பொழுது கவனியுங்கள். பார்த்தீர்களா? "மிருகமும், கள்ளத் தீர்க்கதரிசியும்," தீ-ர்-க்-க-த-ரி-சி, ஒருமை. "மிருகம்," வல்லமை. நரகத்தின் திரித்துவம்; தேவனுடைய திரித்துவத்தைப் போல. இப்பொழுது கவனியுங்கள். அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும்... (ஆணோ அல்லது பெண்ணோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பெண்ணோ, குழந்தையோ அல்லது அது யாராயிருந்தாலும்)... அது சிறியோர், பெரியோர்...இவர்கள்யாவரும்...நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், இருளின் இராஜ்ஜியத்திற்குள்ளாக முத்திரையிடப்படுகின்றனர். 120 இப்பொழுது இன்றைக்கு இரண்டு முத்திரைகள் நடக்கின்றன. அது எந்த நேரத்தில் என்று உங்களுக்குத் தெரியாது...ஓ, சகோதரனே, இது ஆழமாகச் செல்லட்டும். இன்றைக்கு எல்லைக்கோட்டில் இருக்கும் நீங்கள் உங்களுடைய முடிவான தீர்மானத்தைச் செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அது உண்மை. நீங்கள் நீண்ட நேரம் தள்ளாட முடியாது. "என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை." எனவே, நீங்கள் சற்று நேரம் தள்ளாடலாம். ஆனால், "என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை," எல்லைக்கோட்டில் இருப்பது. 121 கவனியுங்கள், மிருகத்தின் முத்திரை ஒரு விசுவாச துரோகத்தின் முத்திரையாயிருக்கிறது, பிசாசு, பிசாசின் கிரியைகள். இயேசு, 'அவர்களுடைய சபை அங்கத்தினரின் மூலம்" என்று கூறினாரா?. [சபையோர், "இல்லை" என்கின்றனர்.) "தங்களுடைய வேத சாஸ்திரத்தினாலா"? ("இல்லை.") "தங்கள் வேதபாட கருத்தரங்கு அனுபவத்தினாலா"? ["இல்லை."] "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்." 122 இப்பொழுது, பரிசுத்த ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், தயவு, பொறுமை, சாந்தம். அதுதான் ஆவியின் கனி. மேலும், கனி, அது பரிசுத்த ஆவியின் முத்திரையாயுள்ளது, தெய்வீக அன்பு இருதயத்தில் நங்கூரமிட்டுள்ளது என்பதைக் காண்பிக்கிறது, உலகத்தின் காரியங்கள் மரித்ததாயிருக்கிறது. 123 இப்பொழுது, பிசாசின் அடையாளம், ஆள்மாறாட்டமாகும்; கிரியைகளே, கிருபையல்ல. கிரியைகள் வரப்போகும் காரியங்களுக்கு நிழலாயிருக்கின்றன; மாய்மாலம், சபைக்குச் சென்று, தன்னை ஒரு கிறிஸ்தவனாகப் பாவனை செய்து, உலகத்தைப் போல வாழ்ந்து, உலகத்தோடு தொடர்பு கொண்டு, வெளியே சென்று உலகத்தைப் போல் நடந்து கொள்கிறார்கள். "மிக நெருக்கமாக," இரு பக்கங்களும் சரியாகப் காணப்படுவது போல் இருக்கும், "தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கும்..." இங்கே ஒரு சபை அங்கத்தினன், தவறாமல் சபைக்குச் சொல்கிறார்; ஒரு அருமையான நபர், சபைக்குச் சொல்கிறார்; நல்ல நபர், ஒழுக்க ரீதியில் நல்லவர். ஆனால், அதே சமயத்தில், அவர்களுடைய அந்தரங்கத்தின் ஆழத்தில் இயேசு நிலைத்திருக்கிற ஒரு அனுபவமும் ஒருபோதும் இல்லை. 124 ஏசாவையும் யாக்கோபையும் பாருங்கள். ஏன், ஏசா யாக்கோபைக் காட்டிலும் இரண்டு மடங்கு நல்லவனாயிருந்தான். நிச்சயமாக, அவன் அப்படித்தான் இருந்தான். ஆனால் யாக்கோபு ஒரு காரியத்தை உடையவனாயிருந்தான், "அவன் பலனளிக்கத் தக்க பலனை உடையவனாயிருந்தான்." அவன் அந்தப் பிறப்புரிமையைக் கண்டான், மேலும் அது பூமியில் உள்ள மகத்தான காரியமாக எண்ணினான். 125 இன்றைக்கு நாம் சபைக்குச் செல்வதை எண்ணிப் பார்க்க முயற்சிக்கிறோம், வேத பண்டிதர் இன்னார்-இன்னார் அல்லது சகோதரன் இன்னார்-இன்னார் பேசுவதைக் கேட்கும்போது, அது போன்ற காரியங்களைச் செய்வதை அல்லது ஒரு அருமையான குழுவைக் கொண்ட ஒரு அருமையான சபையில் சேர்ந்து கொள்ளுதல், அருமையான எழுப்புதல் போன்றவைகளை செய்ய முடியும். அது நன்மையான ஒன்றைச் செய்கிறது என்று நாம் அழைக்கிறோம். அதுவல்ல அது. 126 தேவன் இருதயத்தை நோக்கிப் பார்க்கிறார். யாக்கோபின் இருதயம், எந்தக் காரியம் என்ன வந்தாலும் அல்லது போனாலும் அது கவலைப்படவில்லை. அந்தப் பிறப்புரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவனுக்கு ஒரு திடமான நோக்கமாயிருந்தது. 127 இன்றைக்கு ஒரு உண்மையான விசுவாசி அவ்வாறே இருக்கிறான். உலகம் உங்களை அவர்கள் என்ன வேண்டுமானாலும் அழைக்கட்டும். அவர்கள் வேண்டுமானால், நீங்கள் ஒரு மதவெறியர் என்று கூறட்டும். அவர்கள் இயேசுவை, "பெயல்செபூல்" என்றழைத்தனர். அவர், "அவர்கள் உங்களை அழைப்பது எவ்வளவு நிச்சயமோ" என்றார். "என்னிமித்தம் உங்களைத் துன்பப்படுத்தி, உங்களுக்கு விரோதமாய்ப் பொய்யாய்ப் பொல்லாங்கு கூறினால், நீங்கள் பாக்கியவான்கள். களிகூருங்கள், மிகவும் களிகூருங்கள், ஏனென்றால் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உமக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் இவ்விதமாகத் துன்பப்படுத்தினார்கள்" என்றார். நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்களா? 128 இப்பொழுது, தேவனுடைய முத்திரை என்றால் என்ன? எபேசியர் 4:30, "பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்" என்று கூறியுள்ளது. என்ன? எபேசியர் 4:30, நீங்கள் அதைக் குறித்துக் கொண்டிருக்கிறீர்கள். "பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." இப்பொழுது, அவர்களில் சிலர் இது, அல்லது அது, அல்லது மற்றது என்று கூறுவதை நான் அறிவேன். ஆனால், அது ஒரு பொருட்டல்ல, வேதம், "எந்த மனுஷனுடைய வார்த்தையும் பொய், என்னுடைய வார்த்தை சத்தியமாயிருக்கக்கடவது" என்று கூறியுள்ளது. 129 சிலர், "நாட்களை ஆசரிப்பதே முத்திரையாகும்" என்று கூறுகின்றனர். சிலர், "இதைச் செய்வதே முத்திரை" என்கிறார்கள். சிலர், "இதற்கு ஒரு சாட்சியாக இருப்பதே ஒரு முத்திரையாயிருக்கிறது" என்கின்றனர். 130 ஆனால் வேதமோ, "தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள், அதினாலே நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் போடப்படுவீர்கள்" என்று கூறியுள்ளது. எவ்வளவு காலம்? "நீங்கள் மீட்கப்படும் நாள்வரைக்கும்." அது எப்படி செய்யப்பட முடியும்? 131 தேவன் ஒரு தவறு செய்ய முடியுமா? அவரால் ஒரு மனிதனுக்கு பரிசுத்த ஆவியை அளிக்க முடியுமா...அவர் எல்லையற்றவராயிருந்து, ஆதி முதல் அந்தம் வரையிலும் அறிந்தவர், ஒரு மனிதனுக்கு பரிசுத்த ஆவியை அளித்து, அவனுக்கு நித்திய ஜீவனை வாக்குத்தத்தம் செய்து, அதன்பின்னர் திரும்பி, அதை அவனிடத்திலிருந்து எடுத்துப் போடுவாரா? அது என்னையும், உங்களையும் போல, தவறுகளுக்கு உட்பட்டவராக அவரை முடிவுறச் செய்யும். 132 ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, நம்முடைய பரலோகப் பிதா எந்தத் தவறும் செய்கிறதில்லை. அவர்... நிச்சயமாக. அவர் ஒரு தவறும் செய்ய முடியாது. ஆதியிலிருந்தே, அவர் எல்லையற்றவராயிருந்தார்; அவர் முடிவுவரை அவ்வாறே இருப்பார். அவரால் தவறு செய்ய முடியாது. அவர் பரிபூரணமானவர். 133 கவனியுங்கள், இப்பொழுது நான் மீண்டும் எபிரெயர்களுக்குள் செல்லப் போகிறேன். இப்பொழுது, "நீங்கள் பூரண சற்குணராயிருங்கள்." இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷத்திற்குள்ளாக நான் கடந்து செல்லப் போகிறேன். அது சிறியோர், பெரியோர், (வயதான, வாலிப, ஆண், பெண்) சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும், தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், 134 "ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களைத் தவிர மற்றெல்லாரையும் அவன் வஞ்சித்தான்." அவன் முழு உலகத்தையும், மதசம்பந்தமான வழிபாட்டு முறைகளையும் வஞ்சித்தான். அவன் பாசாங்கு செய்த கிறிஸ்தவனை ஏற்றுக் கொண்டான். அவன் சபை அங்கத்தினரை வஞ்சித்தான். அவன் ஒழுக்கமுள்ள மனிதனை வஞ்சித்தான். அவன் அந்த நல்ல மனிதனை வஞ்சித்தான். அவன் பிரசங்கி என்று அழைக்கப்பட்டவனை வஞ்சித்தான். அவன் கிறிஸ்தவன் என்று அழைக்கப்பட்டவர்களை வஞ்சித்தான். 135 அவன் தன்னுடைய பெரிய பிரச்சாரத்தினால் எல்லோரையும் வஞ்சித்தான், "நாம் எல்லோரும் ஒரே பெரிய சபையாயிருக்கிறோம், நாம் யாவரும் ஒன்று சேர வேண்டும், உலகத்தின் காரியங்களையும், சபையையும், அரசாங்கத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அது என்ன...நாம் எல்லா யுத்தங்களையும் என்றென்றைக்குமாய் தீர்த்து வைப்போம்" என்றான். 136 பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள், அவர்களில் லட்சக்கணக்கானவர்கள், "அதுதான் நமக்கு வேண்டும்" என்று கூறுவார்கள். சகோதரியே, அது எங்கிருந்து வருகிறது என்பதைக் கவனியுங்கள். அதனுடைய பின்னணி எங்கே உள்ளது என்பதைக் கவனியுங்கள். 137 "ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்படாத யாவரையும் அவன் வஞ்சித்தான்." 138 இப்பொழுது நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? இதோ அது உள்ளது. அது ஒரு அதிக அழுத்தம் கொண்டு வெடிக்க செய்யும் இரட்டைக் குழல் துப்பாக்கி. இப்பொழுது, அதைக் கவனியுங்கள். "ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்படாத யாவரையும் அவன் வஞ்சித்தான்..." அவர்கள் சபையில் சேர்ந்த காலம் முதற்கொண்டா? எழுப்புதலின் காலம் முதற்கொண்டா? அவர்கள் சபைக்கு வந்தபோது, அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தனவா? இல்லை. "பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் உலகத்தோற்ற முதல் எழுதப்பட்டிருக்கிறதே!" ஆமென். அதுவே அதைச் செய்கிறது. உங்களுக்கு அது புரிகிறதா? அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆசிரியர்களிடையே காணப்பட்டு வந்துள்ளது. 139 ஆனால், பாருங்கள், கிறிஸ்தவன் பீடத்தண்டை வந்தபோது, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் அவனுடைய பெயர் எழுதப்படவில்லை. வேதம், அவனுடைய நாமம் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் உலகத்தோற்றமுதல் எழுதப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளது. "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். வருகிற யாவருக்கும் நான் நித்திய ஜீவனை அளித்து, கடைசி நாட்களில் அவனை எழுப்புவேன்" என்றார். நாம் எதைக் குறித்து பயப்படுகிறோம்? 140 களைத்துப்போன என் சகோதரனே, நான் கூறுவதைக் கேளுங்கள். வேதம், "இயேசு உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி" என்று கூறியுள்ளது. கவனியுங்கள். ஓ, என்னே! இது எவ்வளவாய் உங்களுடைய இருதயத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது! இது எப்படியாய் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது! உலகத்தோற்றத்திற்கு முன்பே, சாத்தான் பொல்லாங்கானதை தாறுமாறாக்கி, தேவன், எல்லையற்றவராயிருந்து, காலத்தின் நதியினூடாக நோக்கிப் பார்த்து, முடிவைக் கண்டார். 141 முன்னறிவு! அவர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்க வில்லையென்றால், நீங்கள் தேவனை வரம்புக்குட் படுத்தியிருக்கிறீர்கள், நீங்கள் அவரை உங்களையும் என்னையும் போல வரம்புக்குட்படுத்திவிட்டீர்கள். ஆனால், தேவன் வரம்பற்றவர்; தேவனுடைய வல்லமை, தேவனுடைய அறிவு, எல்லாமே. அவர் சர்வ வல்லமையுள்ளவராயிருக்கிறார். 142 உலகத்தோற்றத்திற்கு வெகுகாலத்திற்கு முன்பே, சாத்தான் பொல்லாங்கானதைச் செய்தபோது, ஏனென்றால் சாத்தான் என்ன செய்யப் போகிறான் என்று தன் சிந்தையில் கொண்டிருந்தான், தேவன் அதை எப்படி எதிர்க்க முடியும் என்பதையும் கண்டார். ஆமென். 143 வேதம், "ஆதியிலே வார்த்தை இருந்தது," பரிசுத்த யோவான் 1, "அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது," ஆதியிலே, நேரம் துவங்கினபோது, அது நித்தியமாயிருந்தது, அதற்கு முன்னர், இது இந்த நேரத்தைக் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். 144 நித்தியம் என்பது ஒரு-ஒரு பரந்த காட்சியைப் போன்றது. அது ஒருபோதும்-அது ஒருபோதும் முடிவதில்லை. அது ஒரு வட்டமாக, என்றென்றும், என்றென்றைக்குமாய் தொடர்கிறது. இது ஒருபோதும் நிற்காத அல்லது முடிவே இல்லாத ஒரு முடிவற்ற சக்கரம். ஆனால் சாத்தான் அங்கே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி, இங்கே இறங்கி வந்து முழு காரியத்தையும் கெடுத்துக் கொண்டிருப்பான். 145 ஆனால் தேவன் ஒரு குறிப்பிட்ட கால அளவு இருக்கும் என்பதை கண்டார். மகத்தான முடிவற்ற ஒன்றாய், துவக்கத்திலிருந்து துவக்கம் வரையிலும், அவர்கீழ் நோக்கிப் பார்த்தார். அவர் ஆதியிலே வார்த்தையாயிருந்தார். இப்பொழுது, வார்த்தை என்பது வெளிப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனையாகும். தேவன் சிந்திக்க தொடங்கி, தேவன் பூமியின் மேல் வந்த ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு பறவையையும் காணத் துவங்கினபோது, ஒவ்வொரு பூச்சியையும், ஒவ்வொரு ஈயையும். அல்லேலூயா! அதுவே முடிவற்ற, சர்வ வல்லமையுள்ள, நித்தியமான, என்றென்றும் பிரசன்னமான தேவன். அந்த ஒருவரைத்தான் நாம் இந்தக் காலையில் சேவிக்கிறோம். 146 ஆதியிலே சில ஜனங்கள் இரட்சிக்கப்பட வாஞ்சிக்கப் போவதாயிருந்ததை அவர் கண்டார், இரட்சிக்கப்பட வேண்டுமென்றிருந்த சில ஜனங்கள், தங்களுடைய இருதயத்தில் உண்மையுள்ளவர்களாயிருக்கும் சில ஜனங்கள். அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். அப்படியானால், அவர்களுடைய இரட்சிப்பிற்கான ஒரு ஆயத்தத்தை அவர் செய்ய வேண்டும், அது உண்மை, இல்லையென்றால் அவர்கள் ஒருபோதும் இரட்சிக்கப்படமாட்டார்கள். குறைவான எந்தக் காரியமும் பரலோகத்திற்குள் வர முடியாது என்பதை அவர் அறிந்திருக்கிறார், எனவே அவர் அவர்களுக்காக ஒரு பரிபூரண வழியை உண்டுபண்ண வேண்டும். ஆமென். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? 147 அதன்பின்னர், அங்கே பின்னால், அவர், "நான், நானே, மாம்ச சரீரத்தைத் தரித்து, உலகத்திற்கு வந்து, நான் இங்கே செலுத்த வேண்டிய அபராதத்தை செலுத்துவேன். நான் அந்த இடத்தை எடுத்துக் கொள்வேன், நான் அவர்களைப் பரிபூரணப்படுத்துவேன், ஏனென்றால் நான் அவர்களை எனக்குள் கொண்டு வருவேன், நான் பரிபூரணமாயிருக்கிறேன்" என்றார். 148 அப்பொழுது இயேசு, "தேவன் பூரண சற்குணராயிருக்கிறார்... இருக்கிறவர்களைப் போலவே...நீங்களும் பூரண சற்குணராயிருங்கள்." 149 அதன்பின்னர் இங்கே இந்தச் சிதைந்த சரீரம் பாவத்திற்காக அடித்து நொறுக்கப்பட்டு, உலகமானது எப்பொழுதும் கொண்டிருந்த அல்லது செய்யவிருந்த பாவம் அவர்மேல் சுமத்தப்பட்டிருந்தது. அவர் அங்கே கடைசி நாளில், அதாவது அவருடைய மரணத்திற்குப் பிறகு மூன்றாம் நாளில், யெகோவா எழுப்பின சரீரமாயிருக்கிறார். 150 நாம் அந்தச் சரீரத்தில் இருந்தால், அந்தச் சரீரம் எவ்வளவு பரிபூரணமாக இருக்கிறதோ, அவ்வளவு பரிபூரணமாக நாம் இருக்கிறோம். ஆமென். அங்குதான் காரியம். நீங்கள் எப்படி அந்தச் சரீரத்திற்குள்ளாகப் பிரவேசிக்கிறீர்கள்? நீங்கள் எப்படி அதற்குள் பிரவேசிக்கிறீர்கள்? வேதம் ரோமர் 8:1-ல், "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட் பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." உலகம் என்ன கூறினாலும் அல்லது வேறு எவரும் என்ன கூறினாலும் அல்லது அவர்களுடைய குடும்பம் என்ன கூறினாலும் கூட அவர்கள் கவலைப்படுகிறதில்லை. அவர்கள் தேவனுடைய ஆவியில் பரிபூரணமாக, தெய்வீக அன்பில் நடக்கின்றனர். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? 151 நீங்கள் எப்படி அதற்குள் பிரவேசிக்கிறீர்கள்? சபையில் சேர்ந்து கொள்வதன் மூலமா? கைகுலுக்குவதன் மூலமா? தண்ணீர் ஞானஸ்நானத்தினாலா? இல்லை ஐயா. 152 முதலாம் கொரிந்தியர் 12-ம் அதிகாரம், "நாமெல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம், அந்தச் சரீரத்தின் அங்கத்தினர்களாக ஆகிவிடுகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர், அது நான் என்ன செய்திருக்கிறேன் என்பதோ, நான் என்னவாயிருக்கிறேன் என்பதோ, நான் யாராயிருந்தேன் என்பதோ, அல்ல, அல்லது அதைக் குறித்து ஒன்றுமேயல்ல. கிறிஸ்துவுக்குள் தேவன் எனக்காக அதைச் செய்திருக்கிறார், நாம் நம்முடைய பலியைக் கொண்டு பரிபூரணப்பட்டிருக்கிறோம். 153 அவர் எந்தத் தவறும் செய்கிறதில்லை. நீங்கள் தகுதியற்றவர்களாயிருந்தால், அவர் உங்களை உள்ளே கொண்டு வரமாட்டார். அவர் உங்களுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். அது உண்மை. நீங்கள் யாரென்று அவர் அறிந்திருக்கிறார். அவர் உங்களுடைய நோக்கங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் யாரென்று அவர் அறிந்திருக்கிறார். சாலையெங்கும் கண்ணிகள் இருக்கின்றன. நிச்சயமாக, பிசாசு உங்களை இடறலடையச் செய்வான். நீங்களோ, "நான் அதைச் செய்ய வேண்டுமென்று செய்யவில்லை. தேவனே, நீர் அதை அறிந்திருக்கிறீர்" என்று கூறுகிறீர்கள். நீங்கள் இன்னமும் பரிபூரணமாக இருக்கிறீர்கள், ஏனென்றால் ஒவ்வொரு நாளும் உங்களுக்காக ஒரு பரிபூரண இரத்தம் அளிக்கப்படுகிறது, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இரத்தம் தோய்ந்த ஒரு பலி தொங்கிக் கொண்டிருக்கிறது. அது உண்மை. இப்பொழுது, நீங்கள் எப்படி அங்கே உள்ளே பிரவேசிக்கிறீர்கள்? தேவன், முன்னறிவினால்... 154 இப்பொழுது, தேவன் இயேசு...இப்பொழுது உங்களுடைய சிந்தனைகளை விழித்தெழச் செய்யுங்கள். உங்களுடைய இருதயத்தைத் திறந்து கொள்ளுங்கள். பாருங்கள். வேதம், "இயேசு ஆட்டுக்குட்டியானவர் (எங்கிருந்து அடிக்கப்பட்டார்?) "உலகத்தின் அஸ்திபாரம்." அவர் கொல்லப்பட்டார். ஏன்? தேவன், பிதா, அவர் கீழ்நோக்கிப் பார்த்து, எப்படி என்று கண்டபோது... 155 இயேசு ஒரு தற்செயலான மரணத்தை மரிப்பதற்காக ஒருபோதும் வரவில்லை. அவன், "பாருங்கள், நான் மரித்த விதத்தையும், ஒவ்வொரு காரியத்தையும் அவர்கள் காணும்போது, யாராவது ஒருக்கால் பரிதாபப்படக்கூடும்" என்று கூறவே வரவில்லை. இல்லை. இல்லை. தேவன் தம்முடைய வேலையை அந்தவிதமாக நடத்துவதில்லை. தேவன் தம்முடைய ஊழியத்தை பரிபூரணமாக நடத்துகிறார். அது உண்மை. 156 என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அவர் சரியாக அறிந்திருந்தார். அந்தவிதமாகவே அவரால் முன்கூட்டியே கூற முடிந்தது. அவர் சரியாக என்னவென்பதை அறிந்திருக்கிறார்... "ஒருவரும் கெட்டுப்போவதை அவர் விரும்புகிறதில்லை." "அவர் அவ்வாறிருக்க சித்தமாயிருக்கவில்லை," ஆனால், அவர் எல்லையற்றவராயிருப்பாரானால், யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆகையால், நீங்கள் தேவனை ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால், நீங்கள் உறுதியாக இருக்கலாம், நீங்கள் உங்களுடைய நித்திய இலக்குவரை நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள். சரியாக. பாருங்கள், அவர் முன்னறிந்திருக்கிறார். 157 இப்பொழுது கவனியுங்கள். வேதம், "இயேசு, ஆட்டுக்குட்டி, உலகத் தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்டார்" என்று கூறியுள்ளது. ஓ! நான் இங்கு வேடிக்கையாக நடந்துகொள்கிறேன் என்பதை நான்-நான் அறிவேன், ஆனால் நான்-நான்-நான் மகிமையாக உணருகிறேன். பாருங்கள். என்ன? இயேசுவானவர் உலகத்தின் ஒரு துளி மண்ணை உருவாக்குவதற்கு முன்பே அடிக்கப்பட்டார். இயேசு ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தார். ஏன்? ஏனென்றால் தேவன்... இங்கே அது உள்ளது. அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். தேவன் முன்னறிவினால், அவர் ஆதியில் வார்த்தையாயிருந்தபோது, அவர் ஒரு சிந்தனையை உணர்ந்தார். இப்பொழுது அது ஒரு சிந்தனையாயுள்ளது; அப்பொழுது அவர் அதை உரைத்தபோது, அது நிறைவேறும் என்று கூறினார். தேவன் வார்த்தையை உரைத்த அதே நிமிடத்தில் இயேசு அடிக்கப்பட்டார். பிறகு என்ன? நான்காயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் வந்து, தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் ஏற்கனவே இங்கே முன்பு செய்திருந்த கிரயத்தை செலுத்தினார். அவர் வர வேண்டியதாயிருந்தது. பாதாளத்தில் உள்ள எல்லா பிசாசுகளும் அவரை வரவிடாமல் தடுக்க முடியாது. தேவன் அதை ஏற்கனவே உரைத்திருந்தார். 158 இப்பொழுது, விசுவாசியே, நீங்கள் உங்களுடைய சந்தோஷ காலணிகளை அணிந்து கொண்டீர்களா? இதைக் கவனியுங்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருந்தால், நீங்கள் உண்மையாகவே ஒரு தேவ-பிள்ளையாக இருந்தால், வேதம் கூறியுள்ளது... அது, "ஓ, பிரசங்கியாரே!" என்றல்ல. 159 அதுதான் வேதாகமம். "உலகத்தோற்றத்திற்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் உங்களுடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன" என்று அது கூறியுள்ளது. ஓ, என்னே! கிறிஸ்து அடிக்கப்படுவார் என்று தேவன் கூறின அதே நேரத்தில்.......... அவர் உங்களுடைய பெயரையும் எழுதினார். அல்லேலூயா! அங்குதான் காரியம். உங்களுடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறது... 160 அவர், "அவன் பெரியோர், சிறியோர் யாவரையும் வஞ்சித்து விட்டான்" என்றார். அநேகர் சபை அங்கத்தினர்களாயிருந்து, கிறிஸ்தவர்களாகப் பாவனை செய்திருந்தனர். "பெயர் எழுதப்படாத யாவரையும் அவன் வஞ்சித்தான்," சபைப் புத்தகத்தில் அல்ல, ஆனால், "ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில்" (எப்பொழுது?) "உலகத்தோற்றத்துக்கு முன்னே." தேவன் தம்முடைய உரைக்கப்பட்ட வார்த்தையினால் உங்களுடைய பெயரை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதினார். கிறிஸ்துவை, பலியாக, அவர் அனுப்பினார், அதை வாங்கவும், அவர் அவர்களின் பெயர்களை எழுதிய அதே குழுவை மீட்கவும். உலகத்தோற்றத்திற்கு முன்னர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. [ஒலிநாடாவில் காலியிடம்) 161 இப்பொழுது, "அவர் அழைத்தவர்களை, அவர் நீதிமானாக் கியிருக்கிறார்." உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் அவர்களை அழைத்தார். "அவர் அழைத்தவர்களை நீதிமான் களாக்கினார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப் படுத்தியுமிருக்கிறார்." உலகத்தோற்றத்திற்கு முன்னரே உங்களுடைய பெயரைக் கூப்பிட்டு, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதின அதே தேவன், உலகத் தோற்றம் முதற்கொண்டே உங்களுக்கு மகிமையில் ஒரு ஸ்தானத்தை உண்டாக்கியிருக்கிறார். "பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோகும்போது, அங்கே நமக்காக மகிமையில் ஒன்று நமக்கு ஏற்கனவே காத்திருக்கிறது...?.." அங்குதான் காரியம். அதுதான் சுவிசேஷம். 162 நாம் எதைக் குறித்து கவலைப்படுகிறோம்? நாம் ஏன் இந்த விதமாக நோக்கிப் பார்க்கிறோம், "பாருங்கள், நான் வியப்புறுகிறேன்"? 163 உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! வேதம், "பலவீனமான முழங்கால்களை உயர்த்துங்கள். ஒரு காலத்தில் கீழே தொங்கின கரங்கள் மேலே உயர்த்தப்படட்டும். பெலவீனமானவன், 'நான் பெலனாயிருக்கிறேன்' என்று சொல்லக்கடவன்" என்று கூறியுள்ளது. ஆமென். 164 ஏனென்றால், சுவிசேஷம் அளிக்கப்படுகிறது. அது நற்செய்தி. மேலும், இந்தக் காலையில், பரிசுத்த ஆவியானவர், வார்த்தையினூடாக, உங்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வருகிறார், "உலகத்தோற்றத்துக்கு முன்னே தேவன் உங்கள் பெயரை ஆட்டுக்குட்டியின் ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைத்தார்" என்று கூறப்பட்டுள்ளது. நரகத்திலிருந்து வந்த எல்லா பிசாசுகளும் அதை அங்கிருந்து அழிக்க முடியாது. தேவனுடைய வார்த்தை அதைச் செய்துள்ளது. உலகத்தோற்றத்திற்கு முன்னரே தேவன் அதை அங்கே எழுதினதுபோல, நிச்சயமாகவே சம்பவிக்கும்! ஆமென். நம்முடைய பரலோகப் பிதா தம்முடைய முடிவற்ற அன்பிலும், அவருடைய இரக்கத்திலும் நமக்காக அதைச் செய்ய எவ்வளவு மகிமையுள்ளவராயிருக்கிறார்! 165 "ஆகையால், உங்கள் பரமபிதா பூரண சற்குணரா யிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்" என்றார். நீங்கள் எப்படி இருக்க முடியும்? அது என்னுடைய பரிபூரணமல்ல, அது உங்களுடைய பரிபூரணமல்ல. அது அவருடைய வார்த்தையின் அவருடைய பரிபூரணமாயுள்ளது; அவர் உங்களைத் தெரிந்துகொண்டார், நீங்கள் அவரை ஒருபோதும் தெரிந்துகொள்ளவில்லை. அவர் உங்களைக் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்தார். தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்து எவ்வளவு பரிபூரணமாயிருந்தாரோ, அவ்வளவாய் நீங்கள் இயேசு கிறிஸ்துவோடு பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் உங்களுடைய சொந்தத்தோடு நின்று கொண்டிருக்கவில்லை. நீங்கள், "நான் தேவனை விசுவாசிக்கிறேன்" என்ற ஒரு காரியத்தோடு, அவருக்குள் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஆமென். ஓ, நான் அவரை நேசிக்கிறேன்! ஓ, என்னே! 166 ஏதேனின் மறுபக்கத்தில், ஆமென், என்றோ ஒரு நாள் அது என்ன ஒரு அற்புதமான நேரமாக இருக்கும், நீங்கள் கீழ்நோக்கிப் பார்த்து, "நான் ஏன் பயந்தேன்? நான் தவறவிட்ட சந்தோஷத்தைப் பாருங்கள்." 167 இந்தக் காலையில் வாலிப மனிதனே, வாலிப ஸ்திரீயே, அல்லது ஒருபோதும் கிறிஸ்தவனாக இல்லாதிருந்த வயோதிக மனிதனோ அல்லது பெண்ணோ, தேவன் தொடர்ந்து உங்களுடைய இருதயத்தைத் தட்டியிருக்கிறார். (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தைத் தட்டினார்-ஆசி.) ஓ, ஆம், நீங்கள் பாதையின் முடிவில் உள்ளே வரலாம், ஆனால் உங்களுக்குச் சந்தோஷம் இருக்காது. பிரகாசிக்க உங்களைச் சுற்றி நட்சத்திரங்களே இருக்காது. நான் அந்தவிதமாக நிற்க விரும்பவில்லை. 168 "உண்மையும் உத்தமுமான என் ஊழியக்காரனே, அது நன்றாகச் செய்யப்பட்டது" என்று அவர் கூறுவதை நான் கேட்க விரும்புகிறேன். நான் என்னுடைய பாராட்டுதலை அவருக்குக் காண்பிக்க விரும்புகிறேன். 169 என்னுடைய எளிய, சிறிய, வயதான தலை நரைத்த மனைவி, அவள் விரும்புகிறதை நான் அறிந்திருக்கிறபடியால், நான் அவளுக்காக ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய எவ்வளவாய் விரும்புவேன். ஏனென்றால் நான் அவளை நேசிக்கிறேன், அவள் என்னை நேசிக்கிறாள் என்பதை நான் அறிவேன். மானிட அன்போடு, என் மனைவிக்காக நான் அதைச் செய்தால், உலகத் தோற்றத்திற்கு முன்னே என்னை ஒரு பரிதாபமுள்ளவனாகக் கண்டு, ஒரு எளிய, சிறு பாவியாகத் தள்ளாடிக் கொண்டு, தவிர்க்க முடியாமல் நரகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, கிருபையினால், அதை அறிந்து கொள்ள செய்த தேவனுக்கு, நான் என்ன செய்ய வேண்டும்? உலகத்தோற்றத்திற்கு முன்பே அவர் என்னை முன்னறிந்து, உலகத்தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் என் பெயரை எழுதி வைத்தார். ஓ, நான் அவரை நேசிக்கிறேன்! அதைக் கூறுவதற்கு ஒருபோதும் எந்த வழியும் இல்லை...?... வேதம், "கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, மனுஷருடைய இருதயங்களில் தோன்றவுமில்லை" என்று கூறியிருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஓ, என்னே! தேவன் எவ்வளவு மகிமையானவர்! நீங்கள் இளைப்படைந்து, அலைக்கழிக்கப் படுவீர்களானால், நீங்கள் அவரை விசுவாசிக்க விரும்பவில்லையா? 170 கிறிஸ்தவர்களே, உங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, களைப்போடு சுற்றித்திரிந்து, "பாருங்கள், எனக்குத் தெரியாது. நான் சபைக்குச் சென்றால்..." ஓ, நீங்கள் ஒரு மோசமான சாக்குப் போக்குடையவராயிருக்கிறீர்கள். 171 நான் உங்களுக்குச் சொல்லட்டும். உங்கள் தலைகளை உயர்த்துங்கள். உங்கள் மார்பை நிமிர்ந்துங்கள். ஓ, என்னே! ஓ, விசுவாசத்தைப் பயன்படுத்துங்கள். விசுவாசமே எஜமான். அது உண்மை. விசுவாசம் தன்னுடைய மார்பில் முடிகளை உடையதாயிருக்கிறது. சகோதரனே, அது பெரிய தசைகளை உடையதாய் இருக்கிறது என்று நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். அது பேசும்போது, எல்லா கவலைகளும் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு விழுகின்றன. 172 பிசாசு, "இப்பொழுது, உன்னால் அதைச் சரியாகச் செய்ய முடியாது. உன்னால் இதைச் செய்ய முடியாது. நீ சாட்சி கொடுக்க வெட்கப்படுகிறாய்" என்கிறான். 173 விசுவாசம் எழும்பி, 'வாயை மூடு! எனக்குத்தான் பேச உரிமை உண்டு" என்று கூறுகிறது. ஆமென். நிச்சயமாக. விசுவாசம் முன்முயற்சி எடுக்கிறது. அதுதான் இன்றைக்கு நமக்குத் தேசத்தில் உள்ள ஒவ்வொரு யாத்திரீகனுக்கும் தேவையாயுள்ளது. உங்களுடைய தலையை நிமிர்ந்துங்கள். 174 வேதம், "நான் இருந்தபோது..." என்று கூறியுள்ளது. தாவீது, "நான் பயப்பட்டபோது, நான் அவரோடு நடந்து சென்றேன்... நான் அவரை நம்பினேன். நான் பயந்தபோது, அப்பொழுது நான் அவரை நம்பினேன். எனக்கு மரண பயம் வரும்போதெல்லாம், அந்த நிழல்கள்..." 175 பவுல் இறங்கி வந்தபோது, அவன், "மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே?" சகோதரன்... மகத்தான மனிதர்களுடைய ஜீவியங்கள் யாவும் நமக்கு நினைப்பூட்டுகின்றன நாம் நம்முடைய ஜீவியங்களை கம்பீரமானதாக்க முடியும், பிரிந்து செல்லும்போது நாம் பின்னே விட்டுச் செல்கிறோம் காலத்தின் மணலில் அடிச்சுவடுகள் உள்ளன. 176 ஒரு நாள், அந்த நகரத்தில் சூரியன் ஒருபோதும் மறையாத மகிமையின் வான மலைகளில் உட்கார்ந்து, அங்கே பரிசுத்தவான்கள் ஏற்கனவே சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அந்தப் பழைய விசுவாசத்தின் வீரர்கள், அந்த இடங்களைப் பின்னோக்கிப் பார்த்து, நம்முடைய பாதை மகிமையால் உண்டாக்கப்பட்டதைக் கண்டு, நான் அவர்களோடு உட்கார்ந்து, நான் என்னுடைய தலையை ஆகாயத்தில் உயர்த்தி, தேவனை நம்பியிருக்கிறேன் என்பதைக் காண விரும்புகிறேன், புயலின் நேரத்தில் நடந்து சென்றேன். ஓ, என்னே! நாம் ஜெபிப்போமாக. 177 எங்கள் பரலோகப் பிதாவே, இயேசுவுக்காக இந்தக் காலையில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். சுவிசேஷத்தின் பரிபூரணத்திற்காகவும், பூரணப்படுத்துதலுக்காகவும், தேவனுடைய நித்தியமான, உரைக்கப்பட்ட வார்த்தையின் நித்திய இராஜாதி பத்தியத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய வார்த்தையின்படியே, அவர் எங்களை அழைத்து, உலகத்தோற்றத்துக்கு முன்னே அவருக்குள் தெரிந்து கொண்டு, உலகத்தோற்றத்திற்கு முன்னரே எங்களுடைய பெயர்களை எழுதினார். தேவன் ஒரு வார்த்தையைப் பேசும்போது, அது நிறைவேற வேண்டும். அது சம்பவிக்கத்தான் வேண்டும். நீர் அவருடைய நாமத்தை உரைத்தபோது, எங்கள் நாமங்களை நீர் உரைத்தீர். கர்த்தாவே, உலகத் தோற்றத்திற்கு முன்பே நீர் எங்களை அவரோடு தெரிந்துகொண்டீர், எனவே எங்களால் ஏதாகிலும் செய்ய முடியும் என்று எங்களால் கூற முடியாது. அது. அது மனிதவர்க்கத்தில் இல்லை. நாங்கள் எந்தக் காரியத்தின் பேரிலும் தற்பெருமையாகவோ அல்லது தற்பெருமையாகப் பேசவோ முடியாது. நாங்கள் கூறுகிற ஒரே காரியம், "தேவனே, உம்முடைய கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, உம்முடைய இரக்கத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் அந்நியராயிருந்ததைக் காண்கிறோம், ஆனால் இப்பொழுதோ நாங்கள் உள்ளே நிற்கிற அந்தப் பரிபூரண பலியினால் நீர் எங்களைப் பரிபூரணப்படுத்தினீர், நாங்கள் முன்னோக்கிச் செல்லுகையில், ஓ தேவனே, இன்றைக்கு, அவருக்குள் நிற்போமாக" என்று கூறுவோமாக. பிதாவே, இந்தக் காரியங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். 178 கர்த்தாவே, இன்றைக்கு இங்கு யாராவது இருப்பார்களா என்று நாங்கள் கேட்கிறோம், அந்த நிலையில் இல்லாதவர்கள், இந்த நொடிப்பொழுதில் அவர்கள் தங்களுடைய ஒரே நித்தியமான, முடிவான தீர்மானத்தை எடுப்பார்களாக, அவர்களுடைய இருதயத்தில் உம்முடைய கடைசியும் முடிவானதுமான அழைப்பை நீர் அருளும் முன்பு. கிறிஸ்துவின் நாமத்தினூடாக நீர் அதை அருள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 179 நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்திக் கொண்டிருக்கையில், இந்தக் காலையில் இங்கே அப்படிப்பட்ட ஒரு நபர் இருக்கிறாரா என்று நான் எதிர்பார்க்கிறேன், உண்மையாகவே உறங்கும் கன்னிகையில் இருப்பவர்; நீங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வேண்டும் என்ற உணர்தலுக்கு நீங்கள் ஒருபோதும் விழித்திருக்கவில்லையென்றால், நீங்கள் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும், நீங்கள் தேவனை ஒரு ஆத்தும இரட்சகராக நினைவுகூர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் வெளியே சென்று, ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட முயற்சிக்கும் ஒருவராக இருக்க விரும்புகிறீர்களென்றால், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, "தேவனே, என்னை நினைவு கூரும்" என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லதுதான். சரி. 180 இந்தக் காலையில் கிறிஸ்துவை இரட்சகராக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாத அப்படிப்பட்ட ஒரு நபர், ஆனால், இந்தக் காலையில், அந்த முடிவான நித்திய தீர்மானத்தைச் செய்ய விரும்புகிறீர்களா? அங்கே அப்பால் சூரியன் அஸ்தமிப்பதை நீங்கள் காணும்போது, இன்னும் ஒரு சில நாட்கள் மாத்திரமே உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள், நாம் இனிமேல் இங்கே இருக்க மாட்டோம். நீங்கள் அதை அறிவீர்கள். ஆனால் நீங்கள்-நீங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் வர விரும்புகிறீர்கள். தேவன் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அவர் அதைச் செய்கிறார் என்று நீங்கள் விசுவாசித்தால், இந்தக் காலையில், நீங்கள் உங்கள் கையை உயர்த்துவீர்கள், கிறிஸ்து இப்பொழுது உங்களை அவருடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 181 வேறு யாராவது, நீங்கள் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக இந்நாளில் ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, "இந்த நாள் முதற்கொண்டு, நான் இப்பொழுது என் முழு ருதயத்தோடு தேவனை சேவிப்பேன். நான் விசுவாசிக்கிறேன். நான் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய வாழ்நாள் முழுவதும், ஏதோ ஒன்று என்னுடைய இருதயத்தைத் தட்டியுள்ளது, என்னுடைய இருதயத்தைத் தட்டியுள்ளது, நான் அதைப் புறக்கணித்திருக்கிறேன். நான் இப்பொழுது தவறான நேரத்தில் அதைப் புறக்கணித்துவிடுவேனோ என்று நான் பயப்படுகிறேன். ஆகையால், இந்தக் காலையில், தேவன், கிருபையினால், நான் முன்னோக்கி வந்து, என்னுடைய கரத்தை உயர்த்தி, 'ஒரு பாவியான என்னிடத்தில் இரக்கமாயிரும்' என்று கூறுகிறேன்" என்று கூறுவீர்களா? 182 வேறு யாராவது இருப்பார்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சிறு பெண்ணே, உன்னை ஆசீர்வதிப்பாராக. தேனே, உன் கரத்தையும் கூட நான் காண்கிறேன். சரி. வேறு யாராவது இருந்தால், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, "என்னை நினைவு கூருங்கள்" என்று கூறுவீர்களா? 183 பின்வாங்கிப்போன ஒருவர், "ஓ, சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு கிறிஸ்தவன், ஆனால் நான் ஒரு மோசமான சாக்கு போக்குள்ளவன். நான் தொடர்ந்து பின்மாற்றமடைந்து, தவறானதையே செய்து கொண்டிருக்கிறேன். நான்-நான் தேவனை நேசிக்கிறேன். தேவன் என்னைக் கிருபையினால் ஏற்றுக் கொண்டார். நான் அவருடைய பிள்ளை என்பதை நான் அறிவேன். ஆனால் நான் ஒருபோதும் சுறுசுறுப்பாக இருந்ததில்லை, நான் ஒருபோதும் கர்த்தருடைய ஊழியத்தை செய்ததில்லை. நான் எப்படியோ உள்ளேயும், வெளியேயும், உள்ளேயும் வெளியேயும் அலைந்து திரிகிறேன். ஆனால் ஏதோ ஒன்று என் இருதயத்தில் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. நான் என்னுடைய சாட்சியைக் குறித்து வெட்கப்படுகிறேன். நான் இந்தக் காலையில், ஒரு ஆத்துமாவையோ அல்லது எதுவுமின்றி, தேவனை சந்திக்க வெட்கப்படுவேன். நான்- நான்-நான் தேவன் என்னைத் திரும்பக் கொண்டு வந்து, இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் அவருடைய பக்கத்தில் என்னைக் கட்டித் அணைத்து, எனக்குச் சவுக்கடி கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எனக்குத் தகுதியானதோ, இந்த நாள் முதற்கொண்டு நான் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருக்கட்டும். நான் என்னுடைய கரத்தைத் தேவனண்டை உயர்த்துவேன். தேவனே, அதைத்தான் நீர் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறுங்கள். 184 பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை, உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. அதாவது இப்பொழுது தேவன் உங்களுடைய இருதயத்தைக் காண்கிறார். உங்களில் அநேகர் உங்களுடைய கரங்களை உயர்த்தினீர்கள், நான் உங்களை அறிவேன். உங்களுடைய ஜீவியத்தின் ஏற்றத் தாழ்வை நான் அறிவேன். நீங்கள்...(மீதமுள்ள கிறிஸ்தவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள்.) உங்களுடைய ஏற்றத் தாழ்வு நிலையை நான் அறிவேன். உங்களுடைய பின்மாற்றத்தை நான் அறிவேன். நான் அவர்களை அறிந்திருந்தால், தேவன் அவர்களை எவ்வளவு நன்றாக அறிவார். நீங்கள் பீடத்தண்டை வருவதை நான் காண்கிறேன், ஒரு துவக்கத்தை உண்டாக்க முயற்சித்து, திரும்பிச் செல்வது, ஒரு துவக்கத்தை உருவாக்க முயற்சித்து, திரும்பிச் செல்வது. 185 வழக்கமாக இங்கே ஞாயிறு வேதபாடப் பள்ளியைப் போதித்து வந்த ஒரு மனிதன், ஒரு சில நாட்களுக்கு முன்னர், கீழே விழுந்து மரித்துப் போனார். அவருடைய ஜனங்களில் சிலர் இங்கே இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் யாரைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பது உங்களில் அநேகருக்குத் தெரியும். அந்த மனிதன் சபைக்கு வருவார், அவர் திரும்பிச் செல்வார்; அவர் சபைக்கு வந்திருப்பார், அவர் திரும்பிச் செல்வார். அவர் சரியானதைச் செய்ய விரும்பினார். அவருக்குத் தேவனோடு ஒரு அனுபவம் இருந்தது. அவர் இருதயத்தில் ஒரு நல்ல மனிதனாயிருந்தார், ஆனால் அவர் உலகத்தோடு மிக அதிகமாகத் தடுமாறிக் கொண்டிருந்தார். அவர் ஒரு வாலிபனாக மரித்துப் போனார். அவர் உலகத்தை விட்டுச் சென்றார். இப்பொழுது அவருடைய பலன் என்னவாயிருக்கும் என்று நான் யோசிக்கிறேன். பார்த்தீர்களா? அதைச் செய்யாதீர்கள். நண்பனே, அதைச் செய்யாதே. சேணத்துக்குள் தரித்திருங்கள். 186 அந்த மனிதன் இன்றைக்கு பூமிக்கு திரும்பி வந்து, அப்பால் உள்ள நகரத்தில், எந்த இடத்திலும் நின்று, அவர் மரித்த அந்த இடத்திலேயே, அவர் கூச்சலிட்டு, தன்னால் இயன்ற வரையில் கூடாரத்தை நோக்கி ஓடலாம். பையனே, அவர் இங்கு வரும்போது, இந்த அடுத்த வாரம் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும் என்று நான் உங்களுக்குக் கூறிக் கொண்டிருக்கிறேன். அவர் இப்பொழுது எல்லைக்கு அப்பால் இருக்கிறார். ஆனால், நினைவிருக்கட்டும், நித்தியம் என்ற ஒன்று இருக்கும் வரை, ஒரு வானம் எவ்வளவு ஆழம் உள்ளதோ, ஒரு ஆத்துமாவை இரட்சிக்க அவர்களுக்கு வேறொரு தருணம் கிடைக்காது, தேவனுக்காக ஜீவிக்க மற்றொரு தருணம் ஒருபோதும் இராது. அவர் தன்னுடைய முடிவான தீர்மானத்தை எடுத்திருக்கிறார். 187 இந்தக் காலையில் உங்களுடையதைக் குறித்து என்ன? நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நாம் தேவனுக்காக அதைச் சரிபடுத்திக்கொள்வோமாக. "யோர்தானுக்கு அக்கரையில்" என்னும் சிறு சுருதியை எங்களுக்குக் கொடுங்கள். மறுபுறம்... இப்பொழுது தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள். யோர்தானின்... ஏதேன் என்னும் இனிமையான வயல்வெளிகளில், இப்பொழுது மெதுவாக, நாம் எல்லோருமே. அங்கே ஜீவ விருட்சம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, உங்களுக்கான இளைப்பாறுதல் உண்டு. இயேசு ஒவ்வொரு சங்கிலியையும் உடைக்கிறார், இயேசு ஒவ்வொரு சங்கிலியையும் உடைக்கிறார், இயேசு... உங்களைத் தடுத்து நிறுத்துவது எது? ...ஒவ்வொரு விலங்குகளையும், அவர் உங்களை விடுதலையாக்கும்போது! நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், ஏனென்றால் அவர் என்னை விடுவிக்கிறார்! இப்பொழுது நாம் யாவரும் ஒன்று சேர்ந்து, மெதுவாக. யோர்தானுக்கு அக்கரையில், அங்கே அப்பால் உள்ள ஆற்றில்.) ஏதேன் என்னும் இனிமையான வயல்வெளிகளில் அங்கே ஒரு ஜீவ விருட்சம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, உங்களுக்கான இளைப்பாறுதல் உண்டு. ஏன், இயேசு ஒவ்வொன்றையும் உடைக்கிறார்... 188 அக்கறையற்ற விலங்குகள், மதசம்பந்தமான சங்கிலிகள், ஸ்தாபனங்களின் விலங்குகள், பாவ விலங்குகள், அவிசுவாசம் பிணைப்புகள். இயேசு...(அவருடைய பிரசன்னம் சமீபமாயிருக்கிறது.)...ஒவ்வொரு சங்கிலியையும், உங்களுடைய தீர்மானத்தை அப்படியே செய்யுங்கள். அவர் உங்களை விடுவிக்கும்போது! நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ...அவரைப் போற்றுங்கள், 189 வேறு யாராகிலும், சுற்றிலுமிருந்து விலங்குகள் உடைக்கப் படட்டும். இன்றைக்கு நீங்கள் விடுதலையாயிருக்க விரும்ப வில்லையா? நீங்கள் எதற்காகப் பாசாங்கு செய்கிறீர்கள்? ஏன், நீங்கள் விடுதலையாயிருக்கவில்லையென்றால், நீங்கள் உங்களுக்கு மாத்திரமே பரிதபிக்கப்படுகிறீர்கள்; பரிசுத்த ஆவியானவர், எல்லா பாகங்களும் வழியிலிருந்து விலகி, தேவனுடைய ஆவியானது உங்களுடைய இருதயத்தினூடாக அசைவாடுகிறது. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மற்றொரு பக்கத்தில்......... 190 ஏதோ ஒரு பழைய காரியம் உங்களைப் பிடித்து வைத்திருக்கலாம். நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்பவில்லையா? நம்முடைய பெயர்கள் ஒன்றாகச் சுற்றப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்றென்றைக்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற தேவனுடைய நட்சத்திரங்களாக, நம்முடைய பெயர்கள் மகிமையில் ஒன்றாகச் சுற்றப்பட்டுள்ளன என்று நான் நம்புகிறேன். நோக்கிப் பார்த்து, "அங்கே சகோதரன் பிரான்ஹாம் நிற்கிறார்" என்று கூறும்படி இருப்பதாக. 191 நான், "ஓ, ஆம், சகோதரனே. அன்று காலைக் கூடாரத்தில் இருந்தது நினைவிருக்கிறதா?" ...மலரும், உங்களுக்காக இளைப்பாறுதல் உண்டு. நான் எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதிப்பேன், (நீங்கள் அதைச் செய்ய விரும்பவில்லையா?) ...எப்பொழுதும், எப்பொழுதும் அவரைத் துதித்து, நான்... 192 பின்வாங்கிப்போனவரே, இப்பொழுது நீங்கள் பீடத்தண்டைக்கு மேலே செல்ல விரும்பவில்லையா? ...எப்போதும்... அந்தச் சிறிய பழைய ஏதோ ஒன்று உங்களுடைய வழியில் நின்று கொண்டிருக்கிறது. இயேசு அந்தச் சங்கிலியை உடைக்கிறார். வாருங்கள். அவர் உங்களை விடுதலையாக்கும்போது! என்னுடைய இரட்சகர் மரித்த சிலுவையில், பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்காக நான் கதறினேன்; ஓ, என்னுடைய இருதயத்தில் அந்த இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! அவருடைய விலையேறப்பெற்ற நாமத்திற்கு மகிமை! ஓ, மகிமை... 193 பாவியான நண்பனே, இங்கே பீடத்தண்டையில், பின்வாங்கிப்போனவனே, அதைக் குறித்து இப்பொழுது அவரிடம் கூறு. அது எங்கே இருந்தது? என்னுடைய இருதயத்தில் இருந்தது... 194 நீங்கள் இப்பொழுது அங்கே தேவனோடு தனியாக முழங்காற்படியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவர் உங்களை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை அறியாமல் ஒரு அடைக்கலான் குருவி கூட விழ முடியாது. ஓ, மிகவும் செழுமையான, இனிமையான, கனிவான ஊற்றண்டை வந்து, 195 நீங்கள் ஒருபோதும் பரிசுத்த ஆவியைப் கொள்ளாமலிருந்தால், வாருங்கள். அவர் இங்கே இருக்கிறார். .......இரட்சகருடைய பாதத்தில்; இன்றைக்கு அதில் மூழ்கி, முழுமையடைவே; ஓ, அவருடைய மகிமை...(அதை இப்பொழுது அங்கே பற்றிக்கொள்ளுங்கள்.) 196 உங்களுடைய தலைகள் வணங்கியிருக்கையில், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் ஜனங்களை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் எந்த விதமான இடத்தில் இருந்தனர் என்றும், அவர்கள் அதை எப்படி பெற்றுக் கொண்டனர் என்றும், அவர்கள் அதேவிதமாகச் செயல்படுவதை நீங்கள் காணலாம். நிச்சயமாக. அது மதபேதமுள்ளதாயும், கிரியை செய்து, உணர்ச்சி வசப்படுதலுமாயிருந்தால், அந்தப் பிள்ளை அந்த விதமாக வளர்க்கப்படும். அந்தவிதமாகவே அது செல்லும். அது குளிராக, சாதாரணமாக, அலட்சியமாக இருந்தால்; வழக்கமாகவே அவர்கள் இருக்கும் விதம். அவர்கள் அந்த மாதிரியான ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் அப்பொழுது அதுதான் அங்கே கிரியை செய்து கொண்டிருக்கிறது. 197 என்னைச் சிலுவையண்டைக்கு கொண்டு செல்லும். ஆவியானவர் அசைவாடுகிற ஒரு இடத்திற்கு என்னைக் கொண்டு செல்லுங்கள், அது என் இருதயத்தை கனிவாக்குகிறது. "நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், என்னுடைய ஆஸ்திகளை யெல்லாம் ஏழைகளைப் போஷிக்க நான் கொடுத்தாலும், என்னுடைய சரீரம் ஒரு பலியாக எரிக்கப்பட, எல்லா இரகசியங்களையும், இந்த எல்லாக் காரியங்களையும் அறிந்து கொள்ளும்படியான அறிவைப் பெற்றிருந்தாலும், அவை யாவும் தவறிப் போகும். ஆனால் பரிபூரணமானது வரும்போது, அன்பு வரும்போது, அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்." அன்பு விசுவாசத்தை கிரியை செய்கிறது. 198 இந்த அழகான, தாழ்மையான, இனிமையான பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இங்கே பீடத்தண்டை அசைவாடிக் கொண்டிருக்கையில், நீங்கள் இப்பொழுது வரமாட்டீர்களா? அப்படியே முழங்காற்படியிட்டு, "தேவனே, என்னிடத்தில் இரக்கமாயிரும். இப்பொழுது நீர் என்னுடைய இருதயத்தில், இப்போது நீர் எனக்குக் கொடுக்க நான் விரும்புகிறேன், இந்த ஆவியானவர் சபையில் இருக்கிறார். இப்பொழுது நான் முழங்காற்படியிட்டு, நான் கேட்கிறேன். விசுவாசத்தினாலே நீர் அதை எனக்கு அருளுவீர் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுங்கள். நீங்கள் மிகவும் தாழ்மையான, இனிமையான ஆவிகளில் ஒன்றோடு நடந்து சென்று விடுவீர்கள். அப்பொழுது எல்லாம் முடிந்துவிடும். நான் பாவத்தினின்று மிகவும் அதிசயமாக இரட்சிக்கப் பட்டிருக்கிறேன், இயேசு மிகவும் இனிமையாக உட்புறத்தில் நிலைத்திருக்கிறார், ஓ, அங்கே சிலுவையில் அவர் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்; அவருடைய நாமத்திற்கே மகிமை! மகிமை... 199 நாம் இதைப் பாடிக்கொண்டிருக்கையில், கிறிஸ்தவர்கள் எவரேனும் தங்களுடைய ஜீவியத்தை மீண்டும் அர்ப்பணிக்க விரும்புகிறீர்களா என்று நான் எதிர்பார்க்கிறேன், பரிசுத்த ஆவிக்காகவும், இரட்சிப்பிற்காகவும் வந்துள்ள இவர்களோடு இங்கே பீடத்தண்டையில் இவர்களுடன். நீங்கள் இங்கே எங்களோடு முழங்காற்படியிட்டு, ஒரு சில நிமிடங்கள் எங்களோடு ஜெபிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்குத் தேவையுள்ள எந்தக் காரியமும், அது என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது சுகவீனமாயிருந்தால், உங்களுக்குத் சுகமளித்தல் தேவையாயுள்ளது. அது தொல்லையாயிருந்தாலும், உங்களுக்கு நிவாரணம் தேவையா யிருந்தாலும், நீங்கள் கவலையடைந்து, தொல்லைப் படுத்தப்பட்டிருந்தாலும், சமாதானம் தேவையாயிருந்தாலும் -தேவையாயிருந்தாலும், இப்பொழுது வாருங்கள், நீங்கள் வரமாட்டீர்களா? ஓ, மிகவும் ஐஸ்வரியமும் இனிமையுமான இந்த ஊற்றண்டை வாருங்கள்; உங்களுடைய பரிதாபமான ஆத்துமாவை இரட்சகரிடத்தில் விட்டு விடுங்கள்... இந்தக் காலையில் அநேகர் வருவதைக் காண மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ...இன்றைக்கு முழுமையடையுங்கள்; மகிமை... 200 நீங்கள் பாருங்கள், அது பரிசுத்த ஆவியின் கிரியை. அவர் இதைச் செய்கிறார். "க்கு..." உணர்ச்சிவசப்படுதல் அல்ல. திடமான, ஆழமான. வெறித்தனமாக அல்ல. அது சம்பிரதாயமானது அல்ல. அன்பே நம்மை இழுத்து, வற்புறுத்துகிறது. அங்கே என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; ஓ, அவருடைய நாமத்திற்கே மகிமை! 201 அற்புதம்! இப்பொழுது ஒவ்வொருவரும் தலைவணங்குகின்றனர். நீங்கள் இதை நேசிக்கவில்லையா? நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னுடைய இருதயத்தில், உங்களுடைய உட்புறத்தில் கண்ணீர் துளிகள் இறங்கி வருவதை நீங்கள் உணருகிறீர்கள். தேவனுடைய பரிசுத்த ஆவி அசைவாடிக் கொண்டிருக்கிறது, அவர் கிரியை செய்து கொண்டிருக்கிறார். சகோதரனே, அப்படிப்பட்ட ஒரு சபையை எனக்குக் கொடுங்கள், அது உண்மையாகவே உடைந்துபோய், குயவனுடைய வீட்டிற்குச் சென்று, மறுவடிவமைப்பு செய்யப்படும். இயேசுவே, என்னைச் சிலுவையின் அருகில் வைத்துக்கொள்ளும், விலையேறப்பெற்ற ஒரு ஊற்று உண்டு, அனைவருக்கும் இலவசம்... 202 மனந்திரும்புகிறவர்கள் பீடத்தண்டையில் கேட்டுக் கொண்டிருக்கையில், கூட்டத்தார் அதை இப்பொழுது பாட உதவட்டும். கல்வாரியின் ஊற்றிலிருந்து பாய்கிறது. சிலுவையில், சிலுவையில், ஓ, என்றென்றைக்கும் என்னுடைய மகிமையாயிருப்பதாக; ஆனந்த பரவசமடைந்த என் ஆத்துமா அதைக் கண்டடையும் ஆற்றுக்கு அப்பால் இளைப்பாறுதல். 203 தேவனே, எங்களுடைய பிதாவே, நாங்கள் இன்றைக்கு தாழ்மையாய், நொறுங்குண்டு உம்மண்டை வருகிறோம். பரிசுத்த ஆவி வார்த்தைக்குள் வருகிறது. கிறிஸ்தவர்கள் உம்மை ஏற்றுக்கொண்டதற்காக, மீண்டும் பிறந்ததற்காக, அவர்கள் உமக்கு மிகவும் நன்றி-...மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறார்கள். உலகத்தோற்ற முதல் நீர் இதை நியமித்திருக்கிறீர். நீர் அதை அறிவித்துவிட்டீர். நீர், "நான் இப்பொழுது உங்களிடத்தில் கூற முடியாத அநேக காரியங்களை நான் உங்களிடத்தில் கூற வேண்டியதாயிருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியாகிய அவர் வரும்போது, அவர் இந்தக் காரியங்களை உங்களுக்கு வெளிப்படுத்தி, உங்களுக்குப் போதித்து, உங்களை வழிநடத்துவார்" என்றார். தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்துகிற பரிசுத்த ஆவிக்காக, இந்தக் காலையில், நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். நீரோ, "நான் உங்களுக்குக் கூறியிருக்கிற இந்தக் காரியங்களை அவர் எனக்கு...உங்களுடைய ஞாபகத்திற்குக் கொண்டு வருவார். வரப்போகிற காரியங்களை அவர் உனக்கு அறிவிப்பார்" என்றீர். 204 அவர் இன்றைக்கு நம்மோடு இருப்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வார்த்தையின் போதனையினூடாகவும், பரிசுத்த ஆவியின் கிரியையினூடாகவும், கிறிஸ்தவர்களை விழிப்படையச் செய்து, பாவிகள் உம்மண்டை வரவும், பின்வாங்கிப்போனவர்கள் தங்களை மீண்டும் அர்ப்பணிக்கவும் செய்ய வைத்தது. பிதாவே, அவர்கள் பீடத்தின் இருக்கிறார்கள். வியாதியஸ்தரும், பாதிக்கப்பட்டுள்ள களைப்புற்றோரும் வந்து தங்களுடைய தலைகளை வணங்கி, தங்களுடைய சரீரத்திற்கான சுகத்தை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தார். உம்முடைய உரைக்கப்பட்ட வார்த்தை சத்தியம் என்பதை அறிந்திருக்கிறோம். மற்ற யாவும் தவறிப் போகும், ஆனால் உம்முடைய வார்த்தை ஒருபோதும் தவறிப்போக முடியாது. சத்தியம்! "சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.' 205 இந்தக் காலையில், நீர் எங்களுக்கு அளித்துள்ளதை, உமது மரணத்தில் எங்களுக்காக நீர் செய்த பாவநிவாரணத்திலும், உம்முடைய கடுமையான வேதனையிலுமிருந்து, நாங்கள் ஏற்றுக்கொள்ள வந்துள்ளோம். கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் அதை இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம். நாங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறோம். "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்று நீர் வாக்குப்பண்ணினீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஓ தேவனே, என்னே ஒரு வாக்குத்தத்தம்! அது எதற்காக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நீர், "நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் கேட்பதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள். நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள்" என்று கூறியிருக்கிறீர். 206 இப்பொழுது, பிதாவே, நாங்கள் அதை உண்மையாகவே விசுவாசிப்போமேயானால், அது தீர்த்து வைக்கப்பட்டிருக்கும். நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். அது முடிந்துவிட்டது. அப்பொழுது நீர் அதை எங்களுக்காகச் செய்திருக்கிறீர் என்ற எங்களுடைய அறிக்கையின் படி நாங்கள் செயல்படுகிறோம். நாம் தகுதியுள்ளவர்கள் என்பதல்ல; நாங்கள் தகுதியற்றவர்கள். ஆனால் உமது மூலமாய் தகுதியற்ற நாங்கள் பெற்றுள்ள உம்முடைய கிருபையினூடாக, கிரியை முடிவடைந்துவிட்டது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 207 இந்த மனந்திரும்புபவர்கள், இந்தக் காலையில் வந்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், துன்பத்தின் நன்மைகளுக்காக வருபவர்களுக்கு, தாவீது கூறினது போல, "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி, அவருடைய சகல உபகாரங்களையும் மறவாதே; என் அக்கிரமங்களையெல்லாம், என் பின்மாற்றத்தையும் மன்னிக்கிறார்; அவர் நம்முடைய நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்." அதுவே விசுவாசியின் நன்மைகளாயிருக்கின்றன. நாம் இந்தக் காலையில், தேவனுடைய வார்த்தையின் பேரில் வந்து, விசுவாசத்தின் மூலமாக, அதைப் பெற்றுக் கொள்கிறோம், அது உலகத்தோற்றத்திற்கு முன்னரே உரைக்கப்பட்டது. அது சம்பவிக்காமல் இருப்பது கூடாதக் காரியமாயிருந்தால், நாம் கேட்கிறவைகளைப் பெற்றுக் கொள்ளாமலிருப்பது கூடாத காரியமாயிருக்கும், நாங்கள் விசுவாசத்தோடு விசுவாசித்து அதை வேண்டிக் கொள்வோமேயானால். கர்த்தாவே, நாங்கள் கேட்டுள்ளதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய இருதயங்களுக்குள்ளாக இருக்கிறது. 208 இயேசுவே, எங்களைச் சிலுவையின் அருகே வைத்துக்கொள்ளும். கர்த்தாவே, சத்துரு ஒரு வெள்ளத்தைப் போல வரும்போது, அவனுக்கு எதிராக ஒரு கொடியை உயர்த்தும். காத்திருக்கும் இந்தச் சிறிய சபையை ஆசீர்வதியும். தேவனே, தங்களுடைய ஜீவியங்களை அர்ப்பணித்துள்ள இவர்களை, பீடத்தண்டை முழங்காற்படியிட்டுள்ள இந்தப் புருஷர்களையும், ஸ்திரீகளையும் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் ஏற்றுக்கொள்வாராக. வந்து தங்களுடைய தலைகளை வணங்கியிருக்கும் அந்தப் பாவிகளை உம்முடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக ஏற்றுக்கொள்ளும். 209 கர்த்தாவே, அது அவர்களுடைய சொந்த தனிப்பட்ட நிலைமை என்பதை நான் உணருகிறேன், அவர்கள் உம்மை விசுவாசித்த அந்த நிமிடத்தில் தான் நீர் அவர்களைப் ஏற்றுக்கொண்டீர். ஏனென்றால் நீர், "என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் வரமாட்டான். வருகிற யாவருக்கும் நான் நித்திய ஜீவனை அளித்து, கடைசி நாளில் அவனை எழுப்புவேன்" என்றீர். கர்த்தாவே, அது உம்முடைய வார்த்தையாயுள்ளது. நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். 210 அது முடிந்துவிட்டது, பணி முடிவுற்றுவிட்டது, அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஒவ்வொரு சரீரத்தின் சுகமளித்தலுக்காகவும், ஒவ்வொரு சோர்வுற்ற ஆத்துமாவிற்காகவும், உம்முடைய ஒவ்வொரு காரியத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்...கீழே தொங்கிக் கொண்டிருந்த பலவீனமான கரங்கள், பயத்தோடு இருந்து வந்தவர்கள், யோசித்தவர்கள். தாவீது, "நான் பயமடைந்தபோது, பயமடைந்தேன், அப்பொழுது நான் உம்மை நம்பியிருந்து, தொடர்ந்து நடந்தேன்" என்றான். 211 தேவனே, இந்தக் காலையில் நாங்கள் எங்கள் தலைகளை உயர்த்தியிருப்போமாக; கோழைகள் அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள். பிரகாசிக்கிற நம்முடைய சாட்சியோடு நாங்கள் நடந்து செல்வோமாக. எங்களுடைய சரீரங்களின் சுகமளித்தலின் மூலமாகவும், எங்களுடைய இரட்சிப்பின் சாட்சியினூடாகவும், நாங்கள் மற்றவர்களை உமக்கு ஆதாயப்படுத்துவோமாக. பிதாவே, நாங்கள் வைத்திருக்கிற பீடத்தின் மீதுள்ள அனைத்தையும், இதை அருளும். கர்த்தாவே, நாங்கள் உம்மை விசுவாசித்து, உமக்காகக் காத்திருக்கையில், இதை உமது மகிமைக்காக அருளும். 212 இங்கே தான், உம்முடைய அழகில் நீராடுகிறேன், உம்முடைய வாக்குத்தத்தத்தில் நீராடி, அந்த மகிமையான பரிசுத்த ஆவியானவர் எங்களை உம்மண்டை கவர்ந்திழுப்பதை உணருகிறோம். நாங்கள் உம்மைத் எவ்வளவாய் நேசிக்கிறோம்! நாங்கள் எவ்வளவாய் உம்மைத் துதிக்கிறோம்! 213 கர்த்தாவே, நான் எவ்வளவாய் உம்மை ஆராதிக்கிறேன்! நானே, இங்கே இந்தப் புனிதமான மேசைக்குப் பின்னால், என்னுடைய கரங்களை உம்மை நோக்கி உயர்த்தி, என் தேவனே, நான் உம்மைத் தொழுதுகொள்கிறேன். நான் உம்மைத் தொழுதுகொள்கிறேன். நீரே என் சுகமளிப்பவர், என் இரட்சகர், என் ராஜா, என் வழங்குநர், என் பிதா, என் சகோதரனே! என்னுடைய முழுமையும் உம்மில் தங்கியிருக்கிறது. நீரே என்னுடைய பெலன். நான் பகிரங்கமாக...நீங்கள்...தாவீது, "பரிசுத்தவான்களின் சபையில் உம்மைத் துதிப்பேன்" என்றான். நான் இந்தக் காலையில் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு முன்பாக உமக்குத் துதி செலுத்துவேன். என்னைச் சுகப்படுத்தியதற்காக நான் உம்மைத் துதிக்கிறேன். என் ஜீவியத்திற்காக நான் உம்மைத் துதிக்கிறேன். என்னுடைய ஆரோக்கியத்திற்காக நான் உம்மைத் துதிக்கிறேன். நீர் எனக்குக் காண்பித்திருக்கிற நன்மைக்காக நான் உம்மைத் துதிக்கிறேன். என் நண்பர்களுக்காக நான் உம்மைத் துதிக்கிறேன். கர்த்தாவே, நான் எல்லாவற்றிற்கும் உம்மைத் துதிக்கிறேன். நீர் அற்புதமானவராயும், விவரிக்க முடியாத சந்தோஷமாயும், மகிமையால் நிறைந்தவராயுமிருக்கிறீர்! நான் எவ்வளவாய் உம்மைத் துதிக்கிறேன்! 214 சோர்ந்துபோகிறவர்களுக்கு நான் எப்படியாய் உம்மைச் சிபாரிசு செய்ய முடியும்! ஒரு இரட்சகராக நான் எப்படி உம்மைப் பாவிக்குச் சிபாரிசு செய்ய முடியும்! ஒரு சுகமளிப்பவராக நான் எப்படி உம்மை வியாதியஸ்தருக்கு சிபாரிசு செய்ய முடியும்! அலைந்து திரிபவர்களுக்கு நான் எப்படி உம்மை ஒரு இராஜாவாகச் சிபாரிசு செய்ய முடியும்! ஓ, இந்தக் காலையில் நான் உம்மை எவ்வளவாய் நேசிக்கிறேன்! கர்த்தாவே, அடிக்கப்பட்டிருக்கிறவர்களுக்கு நான் எப்படி உம்மைப் பரிந்துரைக்க பரிந்துரைக்க முடியும் முகாமில் சந்தோஷமான சந்தோஷமாயிருக்க வேண்டும்! நாங்கள் உமக்கு எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம்! 215 ஓ, நீர் வறண்ட தேசத்தில் ஒரு கன்மலையாயும், புயலின் காலத்தில் புகலிடமாயும் இருக்கிறீர்; அல்பா, ஓமெகா, ஆதியும் அந்தமும்; சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம்! ஓ, நாங்கள் எவ்வளவாய் உம்மை நேசிக்கிறோம்! எவ்வளவாய் நாங்கள் உம்மை ஆராதித்து உம்மைத் துதிக்கிறோம், நீர் ஒப்பற்ற நித்தியமான ஒருவரே! நாங்கள் உமக்குத் துதி செலுத்துகிறோம். ஓ, நாங்கள் உம்மை எல்லா காலங்களினூடாகவும் துதித்து, உம்மைத் துதிப்போம்! 216 நாங்கள் இந்த ஆசீர்வாதங்களை, எங்களுடைய உதடுகளின் கனிகளை ஏறெடுக்கையில், கர்த்தாவே, எங்களை ஏற்றுக்கொள்ளும். நீர், "நாங்கள் ஒரு விசேஷித்த ஜனங்கள், ஒரு ராஜரீக ஆசாரியத்துவம், எங்களுடைய உதடுகளின் கனிகளை அவருடைய நாமத்திற்குத் துதி செலுத்தி, ஆவிக்குரிய பலியைச் செலுத்துகிறோம்" என்று கூறினீர். நாங்கள் எவ்வளவாய் அவரைத் துதிக்கிறோம்! நாங்கள் எவ்வளவாய் அவரை என்றென்றைக்குமாய் ஆராதிக்கிறோம்! ஓ. எங்கள் உதடுகள் வெளிப்படுத்தும், எங்களுடைய இருதயத்தின் வந்தனைகளைப் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே, தூய இருதயத்தின் ஆழத்திலிருந்து நாங்கள் உம்மைப் துதிக்கிறோம், நாங்கள் செய்யக் கூடியது அதுவல்ல, அது எங்களுடைய ஜீவியம் அல்ல, அது அவருடைய ஜீவன் என்பதை அறிந்திருக்கிறோம். அது எங்களுடைய இரட்சிப்பு அல்ல, அது அவருடைய இரட்சிப்பு; அது எங்களுடைய பரலோகம் அல்ல, அது அவருடைய பரலோகம்; ஓ, நாங்கள் எங்களுடைய சொந்த கிரியைகள் அல்ல, நாங்கள் அவருடைய கிரியைகளாயிருக்கிறோம்; எங்களுடைய கிருபையல்ல, அது அவருடைய கிருபை; எங்களுடைய மகிமையல்ல, அவருடைய மகிமை; எங்களுடைய வல்லமையல்ல, ஆனால் அவருடைய வல்லமை. ஓ, நாங்கள் எவ்வளவாய் உம்மை நேசிக்கிறோம்! எங்களுடைய சபையல்ல; ஆனால் அவருடைய சபை. கர்த்தாவே, அது எங்களுடைய இருதயங்களாயிருக்கிறபடியால், நாங்கள் எவ்வளவாய் உம்மைத் துதிக்கிறோம். அதுவே எங்களுடைய இருதயங்களாகும். எங்களை ஏற்றுக்கொள்ளும். 217 ஓ தேவனே, இந்தச் சிறிய பிரான்ஹாம் கூடாரத்திற்கு ஆவியின் ஊற்றுதலை அனுப்பும். கர்த்தாவே, நீர் அவ்வாறு செய்வீரா? ஓ, நாங்கள் இங்கே மூலையில் தேவையுள்ளவர்களாயிருக்கிறோம். தேவனே, ஆசீர்வாத மழையை அனுப்பும். தேவனுடைய முன்மாரியையும் பின்மாரியையும் பொழியும். 218 கர்த்தாவே, எங்களுடைய போதகரைப் புதியதாக அபிஷேகியும். அவரைச் சுவிசேஷத்தைக் கொண்டு அக்கினியால் எரியச் செய்யும். கர்த்தாவே, இன்றைக்கு நாங்கள் அவரை நேசிக்கிறோம். அவர் உம்முடைய ஊழியக்காரன். நீர் அவருடைய இருதயத்தை அபிஷேகிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 219 இந்தக் காலையில் கட்டிடத்தில் உள்ள மற்ற பிரசங்கிமார்களின் இருதயங்களையும், ஒவ்வொரு அங்கத்தினரின் இருதயங்களையும் அபிஷேகியும். கர்த்தாவே, நாங்கள் இங்கிருந்து போவோமாக... 220 கர்த்தாவே, என்னை, தகுதியற்ற உம்முடைய எளிய ஊழியக்காரனை மறந்துவிடாதேயும். அதாவது நீர் பரிசுத்த ஆவியினால் என்னைப் புதியதாக அபிஷேகிக்க வேண்டும். கர்த்தாவே, அதை அருளும். 221 இந்த ஆசீர்வாதங்களை எங்களுக்குத் தாரும். நாங்கள் தாழ்மையாய் பீடத்தண்டை காத்திருக்கிறோம், நாங்கள் அதைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதை அறிந்து, உம்முடைய பரிசுத்த ஆவியில் எங்களையே நீராட்டும்; இரட்சிப்புக்கென்று தேவனுடைய வல்லமையாகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கமடையவில்லை. அதற்காக நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! 222 என்றோ ஒரு மகிமையான நாளில், கர்த்தாவே, நாங்கள் உம்மைக் காண்போம் என்று நம்புகிறோம், இன்றைக்கு எங்களோடு நிற்கிறவரின் பாதங்களில் எங்கள் கரங்களை வைத்து, அவரை நாங்கள் பார்க்க முடியாது, ஆனால் அவர் இங்கு இங்கிருக்கிறார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் எவ்வளவாய் அவரைத் துதிக்கிறோம்! .அந்த நகரத்தில், சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காது; மலர்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கும், சூரியன், அது ஒருபோதும் அஸ்தமிக்காது. நான் பயணிப்பது போன்றே உணருகிறேன், நான் உணருகிறேன், நான் பயணிப்பது போன்று உணருகிறேன்; மலர்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன, சூரியன், அது ஒருபோதும் அஸ்தமிக்காது. எத்தனை பேர் அந்தவிதமாக உணருகிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ...சத்தமிடுவது போல உணருகிறேன், சில சமயங்களில் நான் உணருகிறேன், நான் சத்தமிட வேண்டும் என்று உணருகிறேன், நான் உணருகிறேன்; மலர்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன, சூரியன், அது ஒருபோதும் அஸ்தமிக்காது. நான் பயணிப்பது போன்றே உணருகிறேன், நான் உணருகிறேன், நான் பயணிப்பது போன்று உணருகிறேன்; பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன... (...?...) 223 கர்த்தாவே, நீர் படகின் தலைப்பகுதியில் இருப்பவர். நீர் அதைக் குறித்த எல்லாவற்றையும் அறிவீர். நாங்கள் இந்த ஆசீர்வாதத்தை கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 224 அன்புள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் பீடத்தண்டைக் கடந்து போகையில், கூடுதலான ஆசீர்வாதத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்கள் மீது கரங்களை வைத்து, பரிசுத்த ஆவியானவர், அது சரியான வழியில் தொடவில்லை...ஆனால் நாங்கள் ஜெபிக்கிறோம், பரலோகப் பிதாவே, நீர் ஆசீர்வாதங்களை அருளும் ?.ஓ, பரலோகப் பிதாவே பேசும், எங்கள் சகோதரிக்கு இரக்கமாயிரும். 225 அன்புள்ள பரலோகப் பிதாவே, விசுவாசத்தினால் இங்கே இந்த அருமையான ஸ்திரீ நடந்து வரும்போது...அநேக நாட்களாக அவள் இங்கே இருந்து வருகிறாள்; இந்த நரைமுடிகள் மற்றும் சுருக்கங்கள் ?...ஆனால் இங்கே கடின உழைப்பினால் கடந்து செல்ல வேண்டியதாயிருக்கும். இந்தக் கரங்கள் வேதாகமத்தின் பக்கங்களில் இறங்கி உம்மண்டை உயர்த்தப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகமேயில்லை. சந்தேகமேயில்லை, ஆனால் இருதயத்திற்கு உண்மையாய், இந்தக் காலையில், அவள் தன்னுடைய கரத்தின் கீழ் ஒரு ஊன்றுகோலுடன் இந்தச் சபைக்குள் நுழைந்தாள். ஆனால் இப்பொழுது, விசுவாசத்தினாலே, அவள் நடந்து செல்ல, அதைக் கீழே வைக்கிறாள். கர்த்தாவே, அவளைச் சுகப்படுத்தும். அவள் தேவனுடைய ஆசீர்வாதத்திற்காக வருகிறாள். பரலோகத்தின் தேவனே, நீர் அவளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவளுடைய எஞ்சியுள்ள நாட்களில் அவள் அதை ஒருபோதும் எடுக்க வேண்டியதாயிராது. அவளுடைய சரீரத்தில் அவளுக்குப் பெலனைக் கொடுங்கள். கர்த்தாவே, அவள் உமக்காக ஆத்துமாக்களை தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு ஆதாயப் படுத்தட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 226 சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேண்டாம்... நீங்கள் அந்தப் பழைய ஊன்றுகோலை இனி உபயோகிக்க வேண்டியதில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் சரியாகிவிட்டீர்கள், அது இல்லாமல் நீங்கள் வீட்டிற்கு செல்லப் போகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென். நீங்கள் கட்டிடத்தை விட்டு வெளியே செல்லும்போது, நீங்கள் அதை உங்களுடைய தோளின் மேல் சுமந்து கொண்டு, வெளியே நடந்து செல்லுங்கள். எல்லாம் முடிந்துவிடும். 227 பிதாவாகிய தேவனே, இன்றைக்கு இங்கே நின்று கொண்டிருக்கிற இந்தப் பெண்ணை நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவளை முழுவதுமாகச் சுகப்படுத்தும். பிதாவே, இதை அருளும். நாங்கள் அவள்மீது கரங்களை வைத்து, இயேசுவின் நாமத்தில் அதை விசுவாசிக்கிறோம். 228 பிதாவாகிய தேவனே, நாங்கள் சகோதரி ஸ்லாட்டர் மீது கரங்களை வைத்து, அவள் சுகமடையும்படி வேண்டிக் கொள்கிறோம். [ஒலிநாடாவில் காலியிடம்) 229 அன்புள்ள தேவனே, நாங்கள் கரங்களை எங்களுடைய...மேல் வைக்கிறோம். [ஒலிநாடாவில் காலியிடம்) 230 நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் அந்தப் பல்லவியைப் பாடுவேன்; நீங்கள் என்னோடு சேர்ந்து பல்லவியைப் பாடுகிறீர்கள். இந்தப் பரிசுத்த ஆவியின் திட்டத்திற்காக முதலில் மரித்த ஒருவர், யோவான் ஸ்நானன், அவன் ஒரு மனிதனைப் போல மரித்தார்; அதன்பின்னர் கர்த்தராகிய இயேசு வந்தார், அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தனர், ஆவியானவர் மனிதரைப் பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அவர் பிரசங்கித்தார். தொடர்ந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம், அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம், (நான் அதை விரும்புகிறேன்.) அதில் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம் (உலகம் விரும்புவதை அவர்கள் கூறட்டும்.) இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் தொடர்ந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. அப்பொழுது அவர்கள் ஸ்தேவானைக் கல்லெறிந்தபோது, அவன் பாவத்திற்கு எதிராகப் பிரசங்கித்தான் அவன் அவர்களை மிகவும் கோபமடையச் செய்தான், அவர்கள் அவனுடைய தலையை மோதினர்; ஆனால் அவன் ஆவியில் மரித்து, அவன் ஆவியை விட்டான், ஜீவனை அளிக்கும் விருந்தளிப்பவர்களுடன் சேர்ந்து கொள்ளச் சென்றான். தொடர்ந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது... இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம், அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம், இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம், இரத்தம் சொட்டுகிறது. அங்கே பேதுருவும், பவுலும் திவ்விய வாசகனாகிய யோவானும் இருந்தனர், இந்தச் சுவிசேஷம் பிரகாசிக்கும்படியாக அவர்கள் தங்களுடைய ஜீவியங்களை துறந்தனர்; அவர்கள் தங்களுடைய இரத்தத்தை பண்டைய தீர்க்கதரிசிகளோடு கலந்தனர், எனவே உண்மையான தேவனுடையவார்த்தையை நேர்மையாகச் சொல்லப்பட முடியும். தொடர்ந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம், இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம், அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம், இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம், அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள், "எவ்வளவு காலம்?" என்று கதறுகின்றன. தவறு செய்துள்ளவர்களை கர்த்தர் தண்டிக்க; (கவனியுங்கள்.) ஆனால் இன்னும் அதிகமானவர்கள் தங்களுடைய ஜீவனின் இரத்தத்தைக் கொடுக்கப் போகிறார்கள், இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்திற்காகவும், அதனுடைய சிவப்பு நிற வெள்ளத்திற்காகவும். ஓ அது தொடர்ந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம், அதில் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம், அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம், இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் சொட்டிக் கொண்டிருக்கிறது... 231 நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதற்காக இந்தக் காலையில் எத்தனைபேர் மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அது அற்புதமாயிருக்கவில்லையா? நிச்சயமாக. அது சொட்டிக் கொண்டிருக்கிறது... 232 உங்களுக்கு அடுத்தபடியாக நிற்கும் உங்களுடைய நண்பருடன் கரங்குலுக்குங்கள். ...இரத்தம் சொட்டி, "சகோதரனே, அவருடைய எல்லா நன்மைக்காகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுங்கள். ...ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம், இந்த... சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ...சுவிசேஷம் இரத்தம் சொட்டுகிறது. அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது... அதுதான். உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். ..இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டுகிறது, சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம், இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, (அல்லேலூயா!) இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம், ஓ, அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, (?) ..இரத்தத்தோடு, ஆம், இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம், அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் அதைப் பாடுங்கள்! சீஷர்களின் இரத்தம்... ?... 233 சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. (அந்தச் சகோதரி, "சகோதரன் பிரான்ஹாம்?) ஆம். ["...?... கடந்த மூன்று ஆண்டுகளில்."] அற்புதம்! அதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ("உங்களுடன் பேச எனக்கு ஒரு வாய்ப்பு இருக்குமானால், 'வணக்கம்' என்று சொல்லும்படி அவள் என்னிடம் சொன்னாள்."] தேவன் ஆசீர்வதிப்பாராக! 234 ஒரு பெண்மணிக்காக ஜெபிக்கப்பட்டது, அவள் இப்பொழுது மூன்று வருடங்களாகத் தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறாள். இப்பொழுது இந்த நல்ல பழைய பாடலை நாம் பாடுவோம். எத்தனை பேர் இதை விரும்புகிறீர்கள்? பிதாவில் விசுவாசம், குமாரனில் விசுவாசம், பரிசுத்த ஆவியில் விசுவாசம், ஒன்றில் மூன்று; சரி, சகோதரியே, அதைக் கொடுங்கள். குமாரனிடத்தில். விசுவாசம், பரிசுத்த ஆவியில் விசுவாசம், ஒன்றில் மூன்று; பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழித்தெழுவர். ஓ, யேகோவாவில் உள்ள விசுவாசம் எதையும் செய்யும்... 235 இப்படிப்பட்ட நல்ல சந்தோஷமான கூட்டத்தை எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? ஏன், சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நாம் யாவரும் பாடுவோம். ஒவ்வொருவரும் தங்களுடைய உச்சக் குரலில். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, உங்களுக்கு நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. [ஒரு சகோதரன் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்) ஆம். ஆமென். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 236 [ஒரு சகோதரி சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்) என் அருமை சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 237 [ஒலி நாடாவில் காலி இடம்)..உங்களுடைய கரங்களை, இப்பொழுது அதைப் பாடுங்கள். நாம் சந்திக்கும் வரைக்கும் தேவன் உங்களோடிருப்பாராக... 238 சகோதரி கெல்லி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை இங்குக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி! [சகோதரி கெல்லி சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்) சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 239 இது யார் சத்தமிடுகிறது என்பதை யாவரும் அறிவர். அது சகோதரி கெல்லி. உங்களுக்குத் தெரியும், அவள்...பிசாசு அவளை இங்கே, ஒரு மோட்டார் வாகன விபத்தில் கொல்ல முயன்றான், அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, முற்றிலுமாக பாதிப்படைந்திருந்தாள், அவள் ஒருபோதும் நடக்கமாட்டாள் என்றும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் கூறினர். ஆனால், தேவனுடைய கிருபை! அவள் சுகமாக்கப்பட்டாள். இன்று காலை இங்கே இரட்சண்ய சேனை இருப்பது போன்று தென்படுகிறது. நாமும் அவளோடு சேர்ந்து கர்த்தரைத் துதிப்போமாக எல்லோருமே! நீங்கள் யாவரும் வந்து, சகோதரி கெல்லியை சந்தித்து, நீங்கள் வரும்போது அவளோடு கரங்குலுக்குங்கள். 240 நீங்கள் உங்களுடைய சகோதரியைக் காண்பதில் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இங்கே பீடத்தண்டையிலே இறங்கி வந்து அவளோடு கரங்குலுக்குகிறேன். நீங்கள் எல்லோரும், ஒவ்வொருவரும் அவ்வாறு செய்யுங்கள். "உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி!" சரி, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக! சகோதரர் நெவில். நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை; (நாம் சந்திக்கும் வரை!) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! சகோதரர் நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 241 சகோதரன் நம்மைக் கலைந்து செல்லச் செய்கையில், நாம் ஒரு நிமிடம் நின்று நம்முடைய தலைகளை வணங்குவோமாக. ஜெபத்தில் உங்கள் தலைகளை ஒரு நிமிடம் வணங்குங்கள். சகோதரன் நெவில், நீங்கள் விரும்பினால். 64 THE LAMBS BOOK OF LIFE ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகம் 63